புது வருமான வரியை தேர்வு செய்துள்ளீர்களா? அப்போ இந்த 3 சாய்ஸை பயன்படுத்துங்க.. பல லட்சம் சேமிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய வருமான வரி பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால் பலரும் புதிய வருமான வரி முறையை தேர்வு செய்து கொள்ளலாம். புதிய வருமான வரி முறையில் 3 விதங்களில் கூடுதலாக சேமிக்க முடியும்.

இந்த சலுகை முதலில் எல்லோருக்கும் கிடையாது. புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கே அறிவிக்கப்பட்டு உள்ளது.

income tax

0-4 லட்சம் ரூபாய் வரி இல்லை
4-8 இலட்சம் ரூபாய் 5 சதவீதம்
8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம்
12-16 இலட்சம் ரூபாய் 15 சதவீதம்
16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம்
20-24 இலட்சம் ரூபாய் 25 சதவீதம்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம்

எடுத்துக்காட்டு:

புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. நீங்கள் இந்த முறையை தேர்வு செய்துள்ளீர்கள். இப்போது உங்கள் மாத வருமானம் ரூ. 1 லட்சம் என்றால்.. வருட வருமானம் 12 லட்சம்.

புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது.

அதுவே நீங்கள் 12 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது பின்வரும் ஸ்லாப் நடைமுறை ஆகும்.

முதல் 0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 இலட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 இலட்சம் ரூபாய்க்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய்க்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 இலட்சம் ரூபாய்க்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்

பழைய வரி விதிப்பு முறை. அது நீங்கள் பழைய வருமான வரி முறையை தேர்வு செய்து இருந்தால்.. அதில் மாற்றம் எதுவும் இன்று செய்யப்படவில்லை. நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.

10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


கூடுதலாக சேமிக்க முடியும்

புதிய வருமான வரி முறையில் 3 விதங்களில் கூடுதலாக சேமிக்க முடியும். அதன்படி standard deduction அதாவது நிலையான விலக்கு மூலம் சேமிக்க முடியும். புதிய வரி முறையின் கீழ் சம்பளம் பெறும் நபர்கள் நிலையான விலக்கு கோரலாம். சம்பளம் பெறும் நபர்களுக்கு ₹75,000 நிலையான விலக்கு கிடைக்கும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை மாதம் 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது இந்தத் தொகையை ₹50,000 லிருந்து ₹75,000 ஆக உயர்த்தினார். இது முதல் ஆப்ஷன்.

இரண்டாவதாக தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மூலம் விலக்கு பெற முடியும். இது அரசாங்கத்தால் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். பிரிவு 80CCD இன் கீழ் NPSFக்கு பங்களிக்கும் நபர்கள் அதற்கு விலக்கு பெற முடியும். என்.பி.எஸ்-ல் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் அடிப்படை சம்பளத்தில் 14 சதவிகிதம் வரை சேமிக்க முடியும்.

மூன்றாவதாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்படக்கூடிய ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும், புதிய வருமான வரி பிரிவின் கீழ், EPF க்கு (அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம்) பங்களிப்பிற்கும் வரி விலக்கு பெற முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+