டாக்டர் கிருஷ்ணசாமி "கணக்கு".. திமுகவை புட்டு புட்டு வைத்து.. பாஜகவுடன் கூட்டணியா.. என்ன சொல்கிறார்?

டாக்டர் கிருஷ்ணசாமி யாருடன் கூட்டணி வைப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசை டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளதுடன், பல்வேறு கேள்விகளையும் தமிழக அரசுக்கு எழுப்பி உள்ளார்.. அத்துடன் முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.

Recommended Video

    Toture பண்ணா எப்டி படிப்பாங்க? - கிருஷ்ணசாமி

    விரைவில் எம்பி தேர்தல் வரப் போகிறது.. இதற்கு தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. தமிழகத்திலும் அதற்கான முன்னெடுப்புகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன.

    அந்த வகையில், புதிய தமிழகம் கட்சி என்ன செய்ய போகிறது என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.. கடந்த மார்ச் மாதம், டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் ஒரு கூட்டணி உருவானது.

    சமக

    சமக

    அதாவது ஜனநாயக முறையில் தேர்தல் நடக்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசியல் கட்சிகளை இணைத்து ஒரு கூட்டத்தை சென்னையில் நடத்தியிருந்தார் கிருஷ்ணசாமி.. இந்த கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, அமமுகவின் செந்தமிழன், ஃபார்வார்டு பிளாக் கட்சி நல்லுச்சாமி, முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் மூர்த்தி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி, சமாஜ்வாதி கட்சி, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் என அத்தனை பேரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

     கூட்டணி யாருடன்?

    கூட்டணி யாருடன்?

    எனினும், வரப்போகும் தேர்தலில், புதிய தமிழகம் நிலைப்பாடு தெரியவில்லை.. ஒருமுறை கிருஷ்ணசாமி பேசும்போது, "கடந்த காலங்களில் சில இடங்களுக்கு அவசரப்பட்டு கூட்டணி வைத்து தவறிழைத்து விட்டோம்.. நமக்கு அமைந்த கூட்டணிகள் நேர்மையான கூட்டணி இல்லை.. நம்முடைய வாக்குகளை அவர்கள் பெற்று பெற்றி பெற்றார்கள்.. இனி ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும், இல்லாவிட்டால் தனித்து போட்டியிடுவோம்.. புதிய தமிழகம் என்று ஆட்சி அதிகாரத்தில் உட்காருகிறதோ அன்றுதான் இந்த தமிழகம் வளர்ச்சி அடையும்" என்று சொல்லி வருபவர்..

     டாக்டர் கிருஷ்ணசாமி

    டாக்டர் கிருஷ்ணசாமி

    அதுமட்டுமல்லாமல், "மத்திய, மாநில அரசுகள் பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் இனத்தை நீக்க வேண்டும்.. அதன்பிறகு தேவேந்திர குல வேளாளர்களுக்கு என புதிய தனிப்பிரிவை உருவாக்கி தர வேண்டும்.. இப்படி செய்தால்தான், புதிய தமிழகம் கட்சியின் ஆதரவை பெற முடியும் என்பதையும் ஏற்கனவே அறிவித்திருந்தார் கிருஷ்ணசாமி.. எனவே, அதிமுக, திமுக, பாஜக என யாருடனும் கூட்டணி வைக்க போகிறாரா? அல்லது தனித்து போட்டியிட போகிறாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வரும் நிலையில், தற்போது ஒரு பேட்டி தந்துள்ளார்.

    கிருஷ்ணசாமி

    கிருஷ்ணசாமி

    திமுக அரசை முழுக்க முழுக்க விமர்சித்து பேட்டி தந்திருந்தாலும், அதிமுகவையும் சைஸாக தாக்கி உள்ளார். அத்துடன் பாஜக பற்றியும் நாசூக்காக பதிலளித்துள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியது இதுதான்: "திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்கள் ஆகின்றன. ஆனால், கொடுத்த 505 வாக்குறுதிகளில் எந்த முக்கியமான வாக்குறுதியையும் காப்பாற்றவில்லை. குடும்ப பெண்களுக்கு ரூ.1000 வழங்கவில்லை, அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. மின் கட்டண உயர்வை உயர்த்திவிட்டார்கள். திமுக ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் நடைபெறவில்லை.

     கந்தக பூமி

    கந்தக பூமி

    திமுக ஆட்சிக்கு பின்பு மக்கள் வேலைவாய்ப்பை இழக்கிறார்கள். மத்திய அரசைதான் தமிழக அரசு எப்போதும் குற்றம் சாட்டுகிறது. பட்டாசு தொழில் முடங்கி வருகிறது. சரவெடிக்கு தடை விதிப்பதால் இந்தத் தொழிலே கிடையாது. மத்திய மாநில அரசுகள் இணைந்து பட்டாசு தொழிலை காக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். சிவகாசியைக் கந்தக பூமி என்று கூறாமல் வேளாண்மை பூமியாக மாற்ற வேண்டும். டெல்டா மாவட்டங்களை மட்டுமே கவனம் செலுத்தாமல் தமிழ்நாட்டில் மிகவும் வறண்ட பகுதியான விருதுநகர், தூத்துக்குடி, மதுரையில் கவனம் செலுத்த வேண்டும்.

     விடிகாலை 4 மணி

    விடிகாலை 4 மணி

    அதற்காக வேளாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். இந்த விஷயத்தை மாநில அரசு பரந்த நோக்கத்தோடு பார்க்க வேண்டும். பள்ளியில் தேர்ச்சி பெறுவதை வைத்து கல்வி நிறுவனங்கள் கல்வியை வியாபாரமாக்கி வருகின்றன. பள்ளியில் குழந்தைகளை டார்ச்சர் செய்கிறார்கள். இதுபோன்ற மன அழுத்தங்களை தடுக்கவும் டார்ச்சர் செய்வதை தடுக்கவும் விடுதிகளில் 4 மணிக்கு எழுப்புவதை தடுக்க வேண்டும். இதனால் தற்கொலையைத் தடுக்க முடியும்.

     பாஜக கூட்டணி

    பாஜக கூட்டணி

    கல்வி நிறுவனங்களை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். சேலம், நாமக்கல், ஈரோடு போன்ற பகுதியில்தான் தவறுகள் நடக்கின்றன. புதிய தமிழகம் கட்சி தென் தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தென் தமிழகம் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. 3 வருடங்களில் தமிழக எம்பிக்கள் என்ன செய்தார்கள்? திமுக, அதிமுகவால் இனி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியாது. அவர்கள் தேய்ந்து போன டேப்ரிகார்டர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்பதை இப்போதே கூற முடியாது" என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+