பிஎஃப் பணம் எடுப்பது மிக எளிது.. மாத சம்பளம் வாங்குவோருக்காக இபிஎப்ஓ கொண்டு வந்த மேஜர் மாற்றங்கள்
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎப்ஓவில் ஆன்லைன் செயல்பாடுகள் இப்போது சாமானியர்களும் எளிதாக மேற்கொள்ளும் வகையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. சாமானிய மக்களால் பிஎப்பில் பணம் எடுப்பது, பிஎப் கணக்கில் அப்டேட் செய்வது, கணக்குகளை புதுப்பிப்பது போன்ற சேவைகளை செய்வது முன்பு கடினமாக இருந்தது. ஆனால் இபிஎப்ஓ அமைப்பு தொடர்ச்சியாக மக்கள் சந்தித்து வரும் சில பிரச்சனைகளை கண்டறிந்து சரி செய்துள்ளது. அதுபற்றி பார்ப்போம்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎப்ஓவில் அதாவது பிஎஃப் கணக்கில் பணம் எடுக்க விரும்பினால் ஏற்கனவே உள்ள பிஎஃப் கணக்கில் இருந்து (ஏற்கனவே வேலை செய்த நிறுவனம்) தற்போது உள்ள பிஎஃப் கணக்குக்கு (புதிய நிறுவனம்) மாற்றங்கள் செய்ய வேண்டும். அதற்கு புதிதாக வேலைக்கு சேர்ந்த நிறுவனம் அல்லது பழைய நிறுவனம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி ஒப்புதல் அளித்த பின்னரே புதிய நிறுவனத்தின் பிஎஃப் கணக்கிற்கு பணத்தை மாற்ற முடியும். அப்படி மாறிய பின்னரே பணத்தை எடுக்க முடியும். ஆனால் இப்போது பழைய அல்லது புதிய அலுவலகத்தின் ஒப்புதலுக்கான தேவையை பிஎஃப் அமைப்பு நீக்கியுள்ளது.

இதன்படி புதுப்பிக்கப்பட்ட படிவம் 13க்கான சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்ட நிலையில், மென்பொருள் செயல்பட தொடங்கி உள்ளது. இந்த அப்டேட் காரணமாக, பிஎப் கணக்கிற்கு பரிமாற்றக் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டவுடன், முந்தைய கணக்கில் உள்ள பணம் தானாகவே புதிய நிறுவனத்தில் தொடங்கப்பட்ட உறுப்பினரின் பிஎஃப் கணக்கிற்கு மாற்றப்படுகிறது.
அடுத்ததாக, புதிய இபிஎப்ஓ அப்டேட் வெர்சனில், பிஎஃப் கணக்கில் சேமிக்கப்படும் பணத்திற்கு வரி விதிக்கக்கூடிய மற்றும் வரி விதிக்கப்படாத விஷயங்கள் என்னென்ன என்பது தெளிவாக இருக்கிறது. இது வரி விதிக்கக்கூடிய PF வட்டியில் TDS இன் துல்லியமான கணக்கீட்டை உறுதி செய்யும் அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த முன்னேற்றம் 1.25 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.90,000 கோடி பரிமாற்றத்தை எளிதாக்கும் என்றும், இது செயல்பாடுகளை கணிசமாக வேகப்பபடுத்தும் என்றும் இபிஎப்ஓ அமைப்பு நம்புகிறது.
இதேபோல் பல்வேறு பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை எளிதாக்கவும், கடந்த கால பணம் சேமிப்பு தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்யவும், EPFO UAN உருவாக்குவதற்கும் சில உறுப்பினர்களுக்கு கடந்த கால கணக்குகளில் பணம் வரவு வைப்பதற்கும் ஆதார் தேவையை தளர்த்தி இருக்கிறது.. ஆதார் தேவை விவகாரத்தில் பிஎஃப் அறக்கட்டளைகள் மற்றும் நீதித்துறை/மீட்பு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் ஐடி மற்றும் பிற உறுப்பினர் தகவல்களின் அடிப்படையில் மொத்தமாக UANகளை உருவாக்குவதற்கு ஒரு புதிய மென்பொருள் இப்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் தேவையில்லாமல் உறுப்பினர்களின் கணக்குகளில் நிதியை உடனடியாக வரவு வைக்க முடியும்.
ஆனால் அதேநேரம் பிஎஃப் கணக்கிற்காக புதிதாக உருவாக்கப்படும் UANகளை பொறுத்தவரை, ஆதார் எண்ணை உள்ளிட்டு செய்து பதிவு செய்த பின்னரே உறுப்பினர்களால் பயன்படுத்த முடியும். இந்த நடவடிக்கைகள் காரணமாக உறுப்பினர் சேவைகளை கணிசமாக மேம்படுத்தும், நீண்டகால குறைகளைக் குறைக்கும். அத்துடன் தகுதியான கோரிக்கைகளை தானாகத் தீர்ப்பதற்கான சரிபார்ப்பு செயல்முறையும் ஒழுங்குப்படுத்தும் என பிஎஃப் அமைப்பு கருதுகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications