இதென்ன சினிமா துறைக்கு சாபக்கேடா? 5 மாதங்களில் இரு காமெடியன்களை பறித்துக் கொண்டதே விதி!
சென்னை: 3 மாதங்களில் இரு காமெடி ஜாம்பவான்களை இந்த தமிழ் சினிமா இழந்துவிட்டது. முதலில் மயில்சாமி, தற்போது மனோபாலா.
சினிமாவில் வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் உள்ளிட்ட கேரக்டர்களை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் காமெடி என்றால் அது ஆசிர்வதிக்கப்பட்டவர்களால் மட்டுமே முடியும். அழுகை சீனில் கூட நடித்துவிடலாம். ஆனால் ஒருவரை சிரிக்க வைப்பது என்பது மிகவும் முக்கியமானது.
அந்த வகையில் இந்திய சினிமாவில் எத்தனையோ காமெடி ஜாம்பவான்கள் உள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் எத்தனையோ பேர் வந்தாலும் நாகேஷ், பாலய்யா, கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேல், சந்தானம், மயில்சாமி, மனோபாலா உள்ளிட்டோரின் காமெடிகளை அடித்துக் கொள்ளவே முடியாது.

இவர்களால் கூட நிறைய படங்களில் கதையே இல்லாவிட்டாலும் ஓடிய காலங்கள் உண்டு. தற்போதுதான் யூடியூப், ஓடிடி என உள்ளது. அதில் படங்களை பார்க்கலாம். ஆனால் அப்போதெல்லாம் இவை இல்லாத காரணத்தால் காமெடியை ரசிக்க மீண்டும் மீண்டும் அதே படத்தை பார்த்த காலம் எல்லாம் உண்டு.
அந்த வகையில் ஏற்கெனவே நாகேஷ், பாலைய்யா, சந்திரபாபு, விவேக் உள்ளிட்டோரை இழந்துவிட்டோம். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி சிவராத்திரி அன்று காமெடி நடிகர் மயில்சாமியை இழந்துவிட்டோம். அவர் ஏற்கெனவே பைபாஸ் சர்ஜரி நடந்திருந்த நிலையில் இரவு முழுவதும் பூஜையில் கலந்து கொண்டிருந்ததால் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
எத்தனை படங்களில் காமெடியில் கலக்கிய இவரது இழப்பு சினிமா உலகத்தை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் மிகவும் வேதனையடையச் செய்துவிட்டது. இந்த துக்கத்தில் இருந்து மீள்வதற்குள் அடுத்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோபாலா இன்று காலமானார்.
இவரது இறப்பு நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. நடிகர், தயாரிப்பாளர், காமெடியன் என்ற பன்முகத் திறமை கொண்டவர். இவர் நிறைய படங்களில் நடித்துள்ளார். இயக்கியும் உள்ளார். இவரது முதல் படம் ஆகாயகங்கை. ஊர்க்காவலன், பிள்ளை நிலா, மல்லு வேட்டி மைனர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சதுரங்க வேட்டை என்ற படம் இவரது தயாரிப்பில் உருவானது.

காமெடி என வந்துவிட்டால் தன்னை விட வயதில் சிறியவர்கள் கிண்டல் செய்தாலும் அதை பெரிதுப்படுத்தாமல் நடித்து மக்களை சிரிக்க வைப்பார். சந்தானம் அவருடைய உடல் அமைப்பை எத்தனையோ முறை கிண்டல் செய்து காமெடி சீன்களை வைப்பார், ஆனால் எதற்கு அசராத கலைஞனாக மனோபாலா இருந்தார். அது போல் சினிமா துறையில் யார் மறைந்தாலும் அந்த இறப்புக்கு இரங்கல் தெரிவிக்க முதல் ஆளாக மனோபாலா வந்துவிடுவார்.
இறுதியாக மயில்சாமியின் இறப்பிற்கு வந்த மனோபாலா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். இந்த ஆண்டு பிறந்து 5 மாதங்களில் இரு காமெடியன்களை இயற்கை அழைத்துக் கொண்டது. இது உண்மையில் சினிமா துறைக்குக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பேரிழப்பாக இருக்கும். இதென்ன சினிமா துறைக்கு சாபக்கேடா என்று நடிகர் மதன்பாப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications