வரிந்து கட்டி வந்த எடப்பாடி, அண்ணாமலை.. ஆதவ் பெயரை சொல்லாமல் அட்டாக்! பின்னணியில் ரஜினி கணக்கு?!
சென்னை: ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சை அரசியல் நாகரிகமற்ற செயல் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பெயரைக் குறிப்பிடாமல் அவரை விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அண்ணாமலையும் ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்துள்ளார். என்.டி.ஏ கூட்டணி, ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆதரவைப் பெறவே வரிசையாக களமிறங்கி இருப்பதாகத் தெரிகிறது.
திமுக கொடுத்த பயத்தால், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முதலில், ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு ரஜினி ரசிகர்கள் மற்றும் திமுக தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்திருந்தன. அதைத்தொடர்ந்து, பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார், ரஜினிகாந்த் அவர்கள் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது.
அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை ரஜினிகாந்த் அவர்கள். எம்ஜிஆரின் அன்பையும், ஜெயலலிதா அவர்களின் நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல.
அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல்." எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆங்கிலத்தில், illusion என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். யாராலுமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் அவர். அந்த இடம், அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. ஐம்பது ஆண்டுகளாக, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களால் கொடுக்கப்பட்ட இடம்.
அவரது கலைப்பயணத்தில், அவர் எதிர்கொண்ட அரசியல், சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். அவற்றைக் கடந்து, ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல. அதற்கு, மிகுந்த 'மனவலிமை' வாய்த்திருக்க வேண்டும்.
தன்னுடன் நடிக்கும் கலைஞர்களின் திறமை குறித்து அவர் அச்சப்பட்டதுமில்லை. அவர்களை ஒதுக்கியதுமில்லை. மிகச்சிறந்த கலைஞர்களைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்தி இருக்கிறார். அவர்களுக்கான முழு வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார்.
அத்தகைய மனிதரின் 'மனவலிமை' குறித்து, தனக்கென தனி அடையாளம் இல்லாமல், மாமனாரின் பணத்தை வைத்து, பல கட்சிகள் மாறி ஒரு அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதையும், illusion என்று கூறலாம்." எனத் தெரிவித்துள்ளார்.
தவெக, எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக யூகங்கள் உலவி வந்தன. பாஜக தலைமை, விஜய்யை கூட்டணியில் இணைக்க தீவிரமாக முயன்று வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது தவெகவின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருவதன் மூலம், தவெக, என்.டி.ஏ கூட்டணியில் இணையாது என்பது உறுதியாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இதில் இன்னொரு அரசியல் கணக்கும் இருப்பதாகத் தெரிகிறது. ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆதரவைப் பெற முடியும் என்றும் என்.டி.ஏ கூட்டணி கட்சி தலைவர்கள் கணக்குப் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி! -
“ராகுல் காந்தி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஜெயிக்கணும்னே நினைக்கலயா?”.. சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை -
தோல்வி பயம்.. அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் அதுதான்.. விளாசிய கனிமொழி! -
அவிநாசியில் முருகன்.. மத்திய அமைச்சராகும் மலை? ரூட் போடும் அண்ணாமலை! எகிறும் எதிர்பார்ப்பு! -
ஒற்றைத் தலைமை ரெடி! எம்ஜிஆர் - ஜெயலலிதா பலத்தை எட்டிவிட்டாரா எடப்பாடி? -
மாஸ் லீடர்.. அண்ணாமலை பிம்பம் உடைந்ததா? எந்த தொகுதியா இருந்தால் என்ன? வென்று காட்ட முடியாதா? -
"பயத்தை காட்டிட்டியே பரமா"! வேட்புமனு நிறுத்தி வைப்பால் பதறிய ஆதவ் அர்ஜுனா! கடைசியில் ஏற்பு! -
அண்ணாமலை நேர்மையானவரா.. அரவக்குறிச்சியில் நடந்தது என்ன.. செந்தில் பாலாஜி சம்பவம் -
எடப்பாடி தவெக வேட்பாளர் திடீர் மாயம்.. இபிஎஸ்ஸை எதிர்த்து களமிறங்கியவர் எங்கே? பெரும் பரபரப்பு -
கோவை தெற்கில் இருந்து ஆரம்பிக்கும் திமுகவின் தோல்வி.. சவால் விட்ட அண்ணாமலை -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம்












Click it and Unblock the Notifications