வீடு அலாட் ஆகிடுச்சு.. 6 லட்சம் கொடுங்க.. 19 பேரை ஏமாற்றி பணத்தை ‘அபேஸ்’ செய்த இளம்பெண் கைது!
சென்னை : குடிசை மாற்று வாரியத்தில் வீடு பெற்றுத் தருவதாகக் கூறி 19 பேரிடம் இருந்து ரூ.36 லட்சம் பணத்தை மோசடி செய்த பிரியா என்ற இளம்பெண்ணை நேற்று போலீசார் கைது செய்தனர்.
சென்னை அம்பத்துார் சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மனைவி அருணா (36). இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுந்தரி என்பவர் வாயிலாக, கடந்த 2020ஆம் ஆண்டு அம்பத்துார், டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த பிரியா என்ற எமிமா (30) அறிமுகமாகியுள்ளார்.

அப்போது பிரியா, அருணாவிடம், தான் குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரிவதாக கூறியுள்ளார். இருவரும் நன்கு பழகிய நிலையில், குடிசை மாற்று வாரியம் வாயிலாக சொந்த வீடு வாங்கிக் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி அருணாவிடம் 30 ஆயிரம் ரூபாய் முன் பணம் பெற்றுள்ளார்.
அதன் பிறகு, வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, 6 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அருணாவும், அவரிடம் ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார். அத்துடன் அதே பகுதியில் உள்ள மேலும் 18 பேரிடமும் இதுபோல் வீடு வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.30 லட்சம் வரை பிரியா வாங்கி உள்ளார்.
ஆனால், பல மாதங்கள் ஆகியும் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆவணத்தை யாருக்குமே அளிக்காததால், அருணா உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர்.
பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிய பிரியா கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 6ஆம் தேதி அம்பத்துார் போலீசில் புகார் அளித்த நிலையில், பிரியா தலைமறைவானார். இந்நிலையில், நேற்று மதியம் அவரை, அம்பத்துார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications