திநகரில் விபச்சாரம்! 17 வயசு சிறுமியுடன் 70 வயசு தாத்தா! அதிர்ச்சி அடைந்த போலீஸ்! பெண் கைது
சென்னை: சென்னை திநகரில் சிறுமிகளையும் அப்பாவி பெண்களையும் வைத்து விபச்சாரம் செய்ததாக பெண் புரோக்கர் ஒருவரை குடும்பத்துடன் கைது செய்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர் 2ஆவது தெருவில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் சோதனையிட சென்றனர். அப்போது அங்கு 17 வயது சிறுமியிடம் உல்லாசம் அனுபவிக்க 70 வயது முதியவர் இருந்ததை கண்டு போலீஸார் அதிர்ந்தனர்.

அந்த முதியவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் சென்னை தியாகராயநகரை சேர்ந்த பிரபல விபச்சார புரோக்கர் நதியா(37) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இந்த நதியாதான் சிறுமியை விபச்சாரத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் அதற்காக ரூ 25 ஆயிரம் கொடுத்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து நதியாவை விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கஞ்சா, கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளாராம்.
இதில் கிடைத்த பணத்தைவிட பாலியல் தொழிலில் அதிக பணம் கிடைத்ததால் அவரே இந்த தொழிலில் இறங்கியுள்ளார். ஏற்கெனவே ஒரு முறை விபச்சார தடுப்பு பிரிவு போலீஸாரிடம் சிக்கி அரசு காப்பகத்திலும் சிறிது காலம் அடைக்கப்பட்டிருந்தாராம். இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசிக்கும் தனது சகோதரி சுமதி (40), அவருடைய கணவர் ராமசந்திரன் (43) (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன).
சகோதரி மற்றும் அவருடைய கணவருடன் இணைந்து பாலியல் தொழிலை நடத்தியுள்ளார். நேபாளை சேர்ந்த மாயா ஒலி என்ற பெண் இவர்களுக்கு அறிமுகமாகி உதவியுள்ளார். அவர்தான் இவர்களது விபச்சாரத்தை செல்போன் செயலி, சமூகவலைதளங்கள் மூலம் பெருக்கியதாகவும் தெரிகிறது.
இந்த கும்பல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்த அப்பாவி பெண்கள், குடும்ப வறுமைக்காக வேலை தேடி வந்த பெண்கள் ஆகியோரிடம் ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. சிறுமிகளையும் இந்த தொழிலில் இந்த அரக்க கும்பல் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
பஞ்சாப்பை சேர்ந்த சிங் ஒருவரும் விமானத்தில் அவ்வப்போது வந்து ஜாலியாக இருந்துவிட்டு சென்றுள்ளார். அவர்கள் மீது போக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அது போல் சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய நதியா மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. சென்னையில் இது போல் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications