கட்டியணைத்தார்.. சென்னையில் முன்னாள் நீதிபதி மீது பெண் புகார்.. 2 மாதங்கள் கழித்து வழக்குப்பதிவு
சென்னை: சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் தனது வீட்டில் 65 வயதாகும் முன்னாள் நீதிபதி தனியாக வாழ்ந்து வருகிறார். இவர் மீது பெண் ஒருவர் அத்துமீறியதாக புகார் அளித்தார். அந்த புகார் குறித்து கடந்த இரண்டு மாதங்களாக போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தார்கள். இந்நிலையில் புகாரில் முகாந்திரம் இருப்பதாக கருதி, இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் தீவிர விசாரணைக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் இதுவரை இல்லாத ஒன்றாக டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒரு பெரிய புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பெண் ஒருவர் நீதிபதி ஒருவர் மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் முதலில் சி.எஸ்.ஆர் ரசீது கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த பெண் ஓய்வுபெற்ற நீதிபதி மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இதையடுத்து டி.பி.சத்திரம் போலீசார் கடந்த 2 மாதங்களாக அந்த புகார் மனுவின் உண்மைத்தன்மை குறித்து ரகசிய விசாரணை நடத்தி வந்தார்கள். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களும் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வந்தார்கள்.

யார் அந்த முன்னாள் நீதிபதி
குறிப்பிட்ட முன்னாள் நீதிபதி 65 வயதை கடந்தவர் ஆவார். டி.பி.சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஒரு பகுதியில், தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறாராம். அவர் மீது பெண் கொடுத்த புகாரில் முகாந்திரம் இருக்கலாம் என்று கருதிய போலீசார், நேற்று முன்தினம் அந்த ஓய்வுபெற்ற நீதிபதி மீது 2 சட்டப்பிரிவுகளின் கீழ் டி.பி.சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
அடுத்தக்கட்டமாக, இந்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி கைது செய்யப்படுவாரா? என்பது இப்போது வரை தெரியவில்லை. தற்போது அந்த பெண் கொடுத்த புகார் விவரங்கள் வெளியாகி உள்ளது. புகார் கொடுத்த பெண் 45 வயதை தாண்டியவர் என்றும் ஏற்கனவே இதுபோன்ற ஒரு புகாரை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மீது அவர் கொடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
நல்ல சம்பளம்
அந்த பெண் கொடுத்த புகாரில், எனக்கு தெரிந்த வழக்கறிஞர் ஒருவர் ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில், அவருக்கு செயலாளராகவும், அவர் உடன் இருந்து அவருக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும் எனவும் நல்ல சம்பளம் கிடைக்கும் என்றார். அதன்படி, சென்னை டி.பி.சத்திரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தனியாக வசித்து வந்தார். நான் அந்த ஓய்வு பெற்ற நீதிபதியை சந்தித்தேன். வீட்டில் யாரும் இல்லை. அவர் மட்டும் இருந்தார். நான் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.
ஓட்டலில் சாப்பிட்டோம்
அவரும் எனக்கு என்னென்ன வேலை? என்பதை எடுத்து சொன்னார். முதல் பார்வையிலேயே என்னை பிடித்திருப்பதாக தெரிவித்தார். எனக்கு புதிய ஆடைகளை வாங்கி தருவதாக கூறி என்னை வெளியில் அழைத்து சென்றார். ஜவுளிக்கடை ஒன்றுக்கு சென்றோம். அங்கு எனக்கு பிடித்த ஆடைகளை அவர் புதிதாக வாங்கி கொடுத்தார். அதன்பிறகு, ஓட்டல் ஒன்றில் ஒன்றாக சாப்பிட்டோம். பின்னர் வீட்டுக்கு வந்தோம்.
வீட்டுக்கு வருவதற்கு இரவு நேரம் ஆகிவிட்டதால், என்னை அவரது வீட்டிலேயே தங்குமாறு கூறினார். நானும் அவரது வீட்டில் தங்கினேன். நான் முகம் கழுவிக்கொண்டிருந்த போது, பின்பக்கமாக வந்து அவர் என்னை கட்டியணைத்தார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்டு திரும்பினேன். அவரை கடுமையாக கண்டித்தேன். நீ செய்யும் வேலையில், இதுவும் உண்டு. இதை உன்னை வேலைக்கு சேர்த்துவிட்ட வக்கீல் கூறவில்லையா என்று என்னிடம் ஓய்வு பெற்ற நீதிபதி கேட்டார்.
அத்துமீற முயற்சி
அவர் என்னிடம் அதுபற்றி கூறவில்லை. இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று கூறினேன். அத்துடன் வேறு பெண்ணை பார்த்து கொள்ளுங்கள் என்றேன். ஆனால் அவர் விடாமல் என்னிடம் அத்துமீற முயன்றார். ஒரு வழியாக அவரிடம் இருந்த தப்பித்து, வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்துவிட்டேன். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியுள்ளார். இந்த புகார் விவகாரத்தில் தீவிர விசாரணைக்கு பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
எப்ஐஆர் பதிவு ஏன்
பொதுவாக இது போன்ற அத்துமீறல் வழக்குகளில் எப்ஐஆர் போட்டுத்தான் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். அதாவது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதனை தொடர்ந்தே விசாரணைகள் நடைபெறும். விசாரணையின் முடிவில், புகாரில் உண்மை இருப்பதாக காவல்துறை நம்பினால், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடைபெறும்.
-
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications