செட்டிநாடு சிக்கனில் உயிருடன் புழு! பெண் புகார்! வெள்ளிக்கிழமை பொய் சொல்வாங்களா? மறுக்கும் கடை ஓனர்
சென்னை: சென்னை தாம்பரத்தில் அலீப் பிரியாணியில் உயிருடன் புழு நெளிந்த விவகாரத்தில் வெள்ளிக்கிழமை பொய் சொல்ல மாட்டேன் என ஹோட்டல் உரிமையாளர் பேட்டி அளித்துள்ளார்.
செட்டிநாடு சிக்கன் வாங்கிய வாடிக்கையாளர் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை தாம்பரத்தில் முடிச்சூர் சாலையில் அலீப் பிரியாணி என்ற ஹோட்டல் உள்ளது. இங்கு பெண் வாடிக்கையாளர் ஒருவர் நேற்று செட்டிநாடு சிக்கனை வாங்கியுள்ளார். அந்த பார்சலில் புழு இருந்தது குறித்து செய்தியாளர்களுக்கு அந்த பெண் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: என் பெயர் ரேவதி. முடிச்சூர் சாலையில் உள்ள அலீப் பிரியாணி கடையில் சிக்கனை எனது சகோதரர் பார்சல் வாங்கிக் கொண்டு வந்தார். அப்போது வீட்டில் அந்த பார்சலை பிரித்த போது அதில் புழு நெளிந்ததை கண்டார். உடனே அதை எனது சகோதரர் வீடியோவாகவும் எடுத்துள்ளார்.

உடனே எனது சகோதரர் நேராக அந்த கடைக்கு போய் புழு இருந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அந்த கடைக்காரர், யாரும் இதை சாப்பிடலைதானே சார், யாருக்கும் ஒன்றும் ஆகவில்லையா என கேட்டபடியே அந்த பார்சலை வாங்கி வைத்துள்ளார். அப்போது இன்னொரு வாடிக்கையாளர் வந்து கேட்ட போது என் சகோதரருக்கு கொடுத்த சிக்கனில் இருந்த புழுவை எடுத்துவிட்டு அதை அப்படியே அந்த கடைக்காரர் கொடுத்துள்ளார்.
இதை நாங்கள் தட்டி கேட்ட பிறகுதான் கடையை சுத்தம் செய்தார். இதற்காக எங்களுக்கு பணம் கொடுத்து பேரம் பேசினார். இது தொடர்பான அனைத்து வீடியோக்களும் எங்களிடம் உள்ளது. நாங்கள் பணமெல்லாம் வேண்டாம், எங்கள் புகாருக்கு உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்றுதான் கேட்டோம்.
போலீஸில் புகார் அளித்தோம். அவர்கள் வரும் போதோ ஓடாத பிரிட்ஜில் இருந்து நிறைய சிக்கனை எடுத்துக் கொண்டு வெளியே கொட்டினார். நாங்கள் புகார் அளித்தும் எங்களுக்கு சிஎஸ்ஆர் காப்பி கொடுக்கவில்லை. உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் கூறியதாக போலீஸார் கூறினர். ஆனால் இதுவரை உணவு பாதுகாப்பு அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த முறை இதே போல் ஒரு பேக்கரியில் பிரச்சினை என்ற போதும் உணவு பாதுகாப்பு அதிகாரி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து கேட்டதற்கு "என் வேலையை பார்க்க எனக்கு தெரியும். நீங்கள் சொல்ல வேண்டாம்" என்றார். இதுகுறித்து கடையின் உரிமையாளர் அலீப் பாஷா கூறுகையில் நான் இந்த ஏரியாவில் 19 ஆண்டுகளாக கடை வைத்துள்ளேன். இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை.
இப்போதுதான் முதல் முறையாக வந்துள்ளது. இதை அவர்கள் வேண்டுமென்றே செய்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை தொழுகை செய்வதால் நான் பொய் சொல்லமாட்டேன். உயிருடன் ஒரு புழு இருந்ததாகவும் செத்து போய் ஒரு புழு இருந்ததாகவும் கூறுகிறார்கள். அது தவறு. உயிருடன் மட்டுமே இருந்தது. அதுவும் ஒரே ஒரு புழுதான் இருந்தது. புதிதாக வாங்கிய சிக்கன், அதில் எப்படி புழு இருக்கும்? இதுகுறித்து போலீஸாரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளோம் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications