சென்னை புளியந்தோப்பில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி.. பதைபதைக்கும் வீடியோ
சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழை நீரில் அறந்து கிடந்த மின்வயரை மிதித்த 35 வயது பெண் ஒருவர் மின்சாரம் பாய்ந்து இன்று காலை பலியாகினார்.
சென்னை பெரியார் நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் அலிமா(35). இவரது கணவர் ஷேக் அப்துல் மற்றும் ஒரு மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
இவர் புளியந்தோப்பு நாராயணசாமி தெரு பகுதியில் உள்ள சாகிதா பேகம் என்பவர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு அலிமா வீட்டு வேலை செய்வதற்காக நாராயணசுவாமி தெரு வழியாக சென்று கொண்டு இருந்தார்.

மின்கம்பி
அப்போது மழை பெய்து சாலையின் நடுவே தண்ணீர் நின்றதால் ஓரமாக சென்றார். அவ்வழியாக வாகனங்கள் சென்று வந்தன. அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விசாரணை
சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் கவலை
இதுபோன்று மின்சார வயர் அறுந்து கிடப்பதாக காலை முதல் அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் அளித்து வந்த நிலையில் அவர்கள் யாரும் வராததால் இன்று ஒரு உயிர் பறிபோனது என மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

புகார்
பூமியில் புதைந்த மின்சார வயர் மழை நீரால் மேலெழும்பி அறுந்து கிடந்ததால் இது போன்ற விபரீதம் நடைபெற்றது. அந்த பெண் இறந்தபிறகு மின்சார வாரியத்திடம் கூறியும் அவர்கள் அலட்சியமாக இருந்ததாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அலிமா இறந்த சம்பவம் குறித்து வீடியோ வைரலாகி வருகிறது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications