தோழி வீட்டுக்குள் சைலண்ட்டாக வந்த டிஎஸ்பி.. மறு நிமிடம் அதிர்ச்சி சம்பவம்.. வீடியோவில் அந்த உருவம்?
சென்னை: ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் தங்கத்தின் விலை என்பது உச்சத்தில் உள்ளது.. நடுத்தர மக்களால்கூட தங்கம் வாங்க முடியாத சூழ்நிலை இன்று வந்துள்ளது.. இப்படியொரு நெருக்கடியான சூழலில், ஏற்கனவே அரும்பாடுபட்டு சேர்த்து வைத்த நகைகளை திருடுவதும் அதிகரித்து வருகின்றன. அதேபோல கொள்ளை சம்பவங்களும் பெருகி வருகின்றன.. ஒரு பெண் அதுவும் காவல்துறை அதிகாரி இப்படியொரு கொடுமையான சம்பவத்தை செய்து, அனைவருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறார்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் கல்பனா ரகுவன்ஷி.. இவருக்கு 56 வயதாகிறது.. ஜஹாங்கிராபாதில் துணை காவல் ஆய்வாளராக அதாவது டிஎஸ்பியாக வேலை பார்த்து வருகிறார்.

தோழி வீட்டில் கைவரிசை
கல்பனாவின் நெருங்கிய தோழி பிரமிளா திவாரி.. இவர்கள் பல வருட காலமாகவே நெருக்கமான நட்பில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 24ம் தேதி பிரமிளா வீட்டுக்கு கல்பனா வந்திருக்கிறார். கல்பனா குளித்து கொண்டிருந்தபோதே, பிரமிளாவின் பர்ஸிலிருந்து ரூ. 2 லட்சம் பணம் மற்றும் செல்போனை திருடி கொண்டு சென்றுவிட்டார் கல்பனா.
குளித்துவிட்டு வந்து பர்ஸை பார்த்தபோதுதான், பணம், செல்போன் காணாமல் போனது பிரமிளாவுக்கு தெரியவந்துள்ளது.. தன்னுடைய மகளின் ஸ்கூல் பீஸ் கட்டுவதற்காக அந்த பணத்தை பிரமிளா பர்ஸில் வைத்திருந்தாராம்.
தோழி பர்ஸில் பணம்
உடனே அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பார்த்தபோது, கல்பனா கையில் பணக்கட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.. அப்போதுதான் தோழி தன்னுடைய வீட்டுக்கு வந்து சென்றதே பிரமிளாவுக்கு தெரியவந்துள்ளது.
உடனே கல்பனாவுக்கு போனை போட்ட பிரமிளா, திருடியவற்றை எல்லாம் திருப்பி தந்துவிடுமாறு கேட்டுள்ளார்... இதை சிறிதும் எதிர்பார்க்காத கல்பனா, செல்போன் மட்டும் பிரமிளாவிடம் திருப்பி தந்தாராம். பணத்தை தரவில்லையாம்.
எனவே, தன் மகளுக்காக பள்ளிக் கட்டணத்துக்காக வைத்திருந்த பணத்தை திருடியதாக, கல்பனா மீது காவல் நிலையத்தில் பிரமிளா புகார் அளித்தார். போலீசாரும் விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு, டிஎஸ்பி கல்பனா மீது திருட்டு வழக்கை பதிவு செய்தனர்.
வீடியோவில் பெண் டிஎஸ்பி
தானே ஒரு டிஎஸ்பி என்பதால், தன்னுடைய தோழி பிரமிளா, எக்காரணம் கொண்டும் போலீசுக்கு போக மாட்டார் என்று கல்பனா நினைத்திருந்தார்.. தன் மீது போலீசார் திருட்டு வழக்கை பதிவு செய்யவும், உடனே கல்பனா தலைமறைவாகி விட்டாராம். இதையடுத்து கல்பனாவை பிடிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.. இதனிடையே கல்பனா திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரமிளாவுக்கு 35 வயதாகிறது.. எல்ஐசியில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது வீடு போபாலின் ஜஹாங்கிராபாத் பகுதியில் உள்ளது. சம்பவத்தன்று தன்னுடைய வீட்டுக்கு கல்பனா வந்தது இவருக்கு தெரியாதாம். குளித்து கொண்டிருந்த நேரத்தில் நைசாக வந்து சென்றுள்ளார்.
சார்ஜரில் காஸ்ட்லி செல்போன்
பர்ஸில் உள்ள பணமும், சார்ஜில் போட்டியிருந்த செல்போனும் மாயமாகி இருந்ததால், உடனே போலீசுக்கு புகார் செய்திருக்கிறார்.. போலீசார் நேரடியாகவே பிரமிளா வீட்டுக்கு வந்து, அங்கிருந்த சிசிடிவியை ஆராய்ந்தபோதுதான், கல்பனாவின் உருவம் அதில் பதிவாகியிருந்தது,.
டிஎஸ்பி கல்பனா, பணம், செல்போனுடன் வெளியேறுவதும் அதில் பதிவாகியிருந்தது. இப்போது இப்போது பெண் டிஎஸ்பி கல்பனாவை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications