பெண் தொழிலதிபர் ரீட்டா தூக்கிட்டு தற்கொலை.. காரணம் என்ன.. சென்னையில் பரபரப்பு!
பெண் தொழிலதிபர் ரீடா சென்னையில் தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
சென்னை: பெண் தொழில் அதிபர் ரீட்டா சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில், குடும்பத்துடன் வசித்து வந்தவர் ரீட்டா லங்காலிங்கம். டொயொட்டா கார்களை விற்பனை செய்யும் டீலர் நிறுவனமான லேன்சன் டொயோட்டாவின் இணை இயக்குநராக இருந்தவர். கோயம்பேட்டில் இந்த கார் ஷோரூம் உள்ளது.
இவரது கணவர் லிங்காதான், இந்த லேன்சன் டொயோட்டா ஷோரூம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

பிணம்
இந்நிலையில், இன்று காலை ரீட்டா தன் அறையை விட்டு ரொம்ப நேரமாகியும் வெளியே வரவில்லை. அதனால் அவரது வீட்டு சூப்பர்வைசர் ஏசுபாதம், சந்தேகத்தின் பேரில் ரூம் ஜன்னலில் எட்டி பார்த்தார். அப்போது, ரீட்டா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

தாழ்ப்பாள்
கதவை திறக்கலாம் என்றால், ரீட்டா உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டிருந்தார். இதையடுத்து அலறி துடித்த ஏசுபாதம், உடனடியாக நுங்கம்பாக்கம் போலீசுக்கு தகவல் அளித்தார். விரைந்து போலீசார் கதவை உடைத்து கொண்டு, ரீட்டாவின் சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

சந்தேகம்
ரீட்டா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது உடனடியாக தெரியவில்லை. தொழில் ரீதியாக கணவருடன் ரீட்டாவுக்கு பிரச்சனைகள் இருந்ததாகவும் அதன் காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

என்ன காரணம்?
மற்றொரு பக்கம், தன் ஆபீசில் உள்ள எல்லா மேனேஜர்களிடமும் ரீட்டா சண்டை போட்டாராம், இதை கணவர் தட்டி கேட்க போய், அதனால் தம்பதிக்குள் சண்டை என்றும் சொல்கிறார்கள். நேற்றிரவு கூட இது சம்பந்தமாக இருவருக்குள்ளும் தகராறு நடந்துள்ளது. இந்த சண்டையில் கணவர் கோபித்து கொண்டு வீட்டை விட்டு போய்விட்டாராம். ராத்திரி முழுக்க வரவே இல்லையாம். அந்த கோபம், வருத்தத்திலும் ரீட்டா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

போஸ்ட் மார்ட்டம்
எனினும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் ரீட்டா எதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று உறுதியாக தெரியவரும் என்கிறது போலீஸ் தரப்பு! ஆனால் சமீப காலமாக தொடர்ந்து தொழிலதிபர்கள் தற்கொலை செய்து கொண்டு வருவது இளம் தொழிலதிபர்களுக்கு பெரும் கலக்கத்தை தந்து வருகிறது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
எய்ட்ஸ் பெண் டீ குடிக்க கூப்பிட்டாராம்.. உடனே கிளம்பிய முதியவர்.. லேப்டாப்பை திறந்த போலீசுக்கு ஷாக் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தோசைக்கல்லை எடுத்து வந்த மனைவி.. அடுத்த நொடியே வாயடைத்து போன வடமதுரை.. திடுக் திண்டுக்கல் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications