வாழ்ந்தால் உன்னோடு..ஆசை காட்டி மோசம் செய்த அபிநயா! மூனே மாசத்தில் எஸ்கேப்! புலம்பும் புது மாப்பிள்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை அருகே திரைப்படங்களில் வருவது போல காதல் வசனங்கள் பேசி பேக்கரியில் பணியாற்றிய நபரை தனது வலையில் வீழ்த்தியதோடு திருமணமான 100 நாட்களுக்குள் காதலனை ஏமாற்றி நகை பணத்துடன் மாயமான பெண்ணை காவல்துறை தேடி வருகிறது. பேக்கரியில் ஆரம்பித்த காதல் கதை காவல் நிலையம் வரை வந்த பின்னணி குறித்து பார்க்கலாம்..

என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை!. தமிழகத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் கணவனை விட்டு மாயமாகும் பெண்கள், கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்யும் பெண்கள் என நாளுக்கு நாள் செய்திகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இப்படி ஏமாறும் ஆண்கள் ஒரு பக்கம், பெண்களை ஏமாற்றும் ஆண்கள் ஒரு பக்கம் என பட்டியல் நீளும் நிலையில் புதுவித மோசடி ஒன்றும் அரங்கேறி வருகிறது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத நபர்களை குறி வைத்து திருமணம் செய்து மோசடி செய்யும் பெண்கள் குறித்த செய்திகளும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.

பேக்கரி டீலிங்

பேக்கரி டீலிங்

அந்த வகையில் காதலித்து திருமணம் செய்து மூன்றே மாதத்தில் கணவனை விட்டு நகை பணத்துடன் எஸ்கேப் ஆகி இருக்கிறார் அபிநயா என்ற பெண். சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் தாம்பரத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார் இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அதே பேக்கரியில் அபிநயா என்பவர் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.

காதல் வலை

காதல் வலை

சேர்ந்த புதிதிலேயே நடராஜன் ஓரளவு வசதி படைத்தவர் என்பதை தெரிந்து கொண்ட அபிநயா சிறிது சிறிதாக பேசி பழகியுள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் நடராஜனை காதலிப்பதாக கூறி வலை விரித்திருக்கிறார் அபிநயா. இதை எடுத்து இருவரும் பல இடங்களில் சுற்றித் திரிந்து காதல் வளர்த்து வந்திருக்கின்றனர். பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரிந்ததால் அபிநயாவை தனது வீட்டுக்கே அழைத்துச் சென்று பெற்றோரிடம் தங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

திடீரென மாயம்

திடீரென மாயம்

தொடர்ந்து அவர்களுடன் நட்பு பாராட்டி குடும்பத்தில் ஓர் அங்கமாகவே மாறிப் போனார் அபிநயா. இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அபிநயாவுக்கும் நடராஜனுக்கும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. தொடர்ந்து பல லட்சம் செலவு செய்து திருமண வரவேற்பும் நடைபெற்றது. மூன்று மாதங்கள் நடராஜனுடன் வாழ்ந்து வந்த அபிநயா கடந்த 19ஆம் தேதி திடீரென மாயமானார்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

மனைவியை காணவில்லையே என அதிர்ச்சி அடைந்த நடராஜன் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. அவரது செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால் பதறிய அவர்கள் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போதுதான் வீட்டிலிருந்த சுமார் நூற்றி முப்பது கிராம் தங்க நகைகள், 20 ஆயிரம் பணம் மற்றும் பட்டுப் புடவைகள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பெற்றோர் இல்லை தானொரு அனாதை என தங்களுடன் பழகிய அபிநயா நகை பணத்துடன் எஸ்கேப் ஆனது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நகை பணத்துடன் எஸ்கேப்பான அபிநயாவை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+