விஜய்யை கண்ணீருடன் வழிமறித்த தவெக நிர்வாகி அஜிதா! கார் கண்ணாடியை கூடஇறக்கலை! விர்ர்னு போன Vijay!
சென்னை: சென்னை பனையூர் தவெக அலுவலகத்திற்கு வந்த விஜய்யின் காரை வழிமறித்தார் அதிருப்தி பெண் நிர்வாகி அஜிதா. கையில் மனுவுடன் வந்த அந்த பெண் கண்ணீர் மல்க கேட்டும் விஜய் அவரிடம் என்ன பிரச்சினை என கேட்காதது வேதனையை ஏற்படுத்தியதாக அஜிதா தரப்பு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் அஜிதா. அவர் தவெக இணைந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி காலியாக இருப்பதால் அந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் என கேட்டு அவரும் அவரது ஆதரவாளர்களும் தவெக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் விடுபட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க தலைமை அலுவலகத்திற்கு விஜய் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த காரை அஜிதாவும் அவரது ஆதரவாளர்களும் வழி மறித்தனர்.
அப்போது அஜிதா கையில் ஒரு மனுவை வைத்துக் கொண்டு "சார் சார்" என அழைத்தும் அவரது பிரச்சினை என்ன என விஜய் கேட்கவில்லை. மாறாக காரை லேசாக நகர்த்தியதால் சிலர் மீது இடித்தது.
இதையடுத்து அஜிதாவையும் அவரது ஆதரவாளர்களையும் பவுன்சர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் விஜய்யின் கார் புறப்பட்டு கட்சி அலுவலகத்திற்குள் சென்றது. அங்கு போய் விஜய்யை சந்திக்கலாம் என கேட்ட போதும் அஜிதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாம்.
இதனால் விஜய் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுவிட்டு அவர் வெளியே வரும் வரை நான் காத்திருப்பேன் என அஜிதா அங்கேயே நின்று கொண்டிருக்கிறார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்கெனவே 120 மாவட்டச் செயலாளர்களை விஜய் அறிவித்திருந்தார். மீதமுள்ள தொகுதிகளுக்கான மாவட்டச் செயலாளர்களை விஜய் இன்று அறிவிக்க போவதாக நள்ளிரவே தகவல் வெளியானது.
இதையடுத்து கோஷ்டி பூசலால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எந்த தொகுதிகளுக்குமே மாவட்டச் செயலாளர்களை அறிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் என்பவரை அறிவிக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்தன.
இந்த நிலையில் "கட்சியில் உழைப்பவர்களுக்கே பதவி கொடுக்க வேண்டும்" என கோரி தூத்துக்குடியை சேர்ந்த பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல், தனது ஆதரவாளர்களுடன் பனையூருக்கு வந்திருந்தார்.
அவரை தவெக அலுவலகத்திற்கு அரை கிலோ மீட்டர் முன்பாகவே பவுன்சர்கள் தடுத்து நிறுத்திவிட்டனர். சில நிர்வாகிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அஜிதா சமாதானம் ஆகவில்லை. இந்த நிலையில்தான் விஜய் வரும் போது அவரது கார் முன்பு கூடுவோம் என முடிவெடுத்து அவரது கார் முன்பு வழிமறித்தபடி நின்றனர்.
-
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
கதறிய கழகங்கள்.. தட்டித் தூக்கிய தவெக! விஜய்யின் பெருவெற்றிக்கு காரணம் என்ன? உங்க கருத்தை சொல்லுங்க! -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
தவெகவில் பனிப்போர்.. உழைத்தது நாங்க.. பவர் அவங்களுக்கா? மாவட்ட செயலாளர்கள் vs எம்எல்ஏக்கள் முட்டல்! -
“அமைச்சரவையில் இடம்பெறுவோம்.. ஆனால்!” நிலைப்பாட்டை விளக்கிய.. சிபிஎம், சிபிஐ தலைவர்கள்! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications