தாய் திட்டியதால் சென்னை பாடி மேம்பாலத்தில் இருந்து குதித்த இளம் பெண்
சென்னை: தாய் திட்டியதால் சென்னை பாடி மேம்பாலத்தில் இருந்து குதித்த இளம் பெண படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை நியூ ஆவடி ரோடு பகுதியில் வசித்து வருபவர் புஷ்பா (23). இவருக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. புஷ்பா கணவரை பிரிந்து வந்து தாயுடன் கடந்த ஒரு வருடமாக வசித்து வருகிறாராம்.

இந்நிலையில் புஷ்பா அவரது தாய் இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது அவரது தாயார் திட்டியதால் புஷ்பா மன உளைச்சலில் இருந்தாராம்.
இந்நிலையில் நேற்று இரவு வில்லிவாக்கம் பாடி மேம்பாலத்துக்கு சென்ற புஷ்பா திடீரென கீழே குதித்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஓடிச் சென்று புஷ்பாவை பார்த்தனர். அப்போது அவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியபடி இருந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு புஷ்பாவை அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்க ஆபத்தான நிலையில் இருக்கும் புஷ்பாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.தாய் திட்டியதால் இளம் பெண் பாடி மேம்பாலத்தில் இருந்து குதித்த சம்பவம் வில்லிவாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications