"முக்கிய" புள்ளிகளுக்கு தொடர்பாமே.. அன்னபூரணி செய்த அதகளம்.. சிக்கியது இப்படித்தானாம்..!
அன்னபூரணி குறித்த விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்
சென்னை: அன்னபூரணி சாமியார் அருள்வாக்கு சொல்லும் வீடியோக்கள் பெருமளவில் தொடர்ந்து ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. அதுதுடன் அன்னபூரணியின் ஸ்பிரிங் ஆட்டத்தையும் இணையவாசிகள் கலாய்த்து வரும்சூழலில், அன்னபூரணி குறித்த முக்கிய தகவல்கள் கசிந்துள்ளன.
பளபளக்கும் பட்டுச்சேலையில் காட்சியளித்தபடி மக்களுக்கு அன்னபூரணி சொல்லும் அருள்வாக்கு தினமும் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது..
எத்தனையோ பெண்கள் தமிழகத்தில் அருள் வாக்கு சொல்லி இருக்கிறார்கள்.. இப்போதும் சொல்லி வருகிறார்கள்..

பிரபலம்
ஆனால் அத்தனை பேரும் பிரபலமாகவில்லை.. அத்தனை பேரையும் சோஷியல் மீடியாவில் ட்ரொல் செய்யவில்லை.. அன்னபூரணி மட்டும் இந்த அளவுக்கு பிரபலம் ஆக காரணம், அவரது கடந்த கால வாழ்க்கைதான்... அன்னபூரணி இவ்வளவு காலம் இல்லாமல் திடீரென ஏன் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்? இவருக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்ற ஒவ்வொரு தகவல் எல்லாம் மெல்ல மெல்ல கசிந்து கொண்டிருக்கிறது.

செங்கல்பட்டு
எங்கெங்கோ அருள் வாக்கு சொல்லி கொண்டிருந்தவர், செங்கல்பட்டுக்குள் காலை வைக்கவும்தான் பிரச்சனை வெடித்துள்ளது.. காரணம், அங்குள்ள அம்மா டீம் உஷாராகி விட்டது.. செங்கல்பட்டுக்குள் அன்னபூரணி தலைதூக்கினால் சரிவராது என்று முடிவு செய்துதான், அவரை ஒரு போலி சாமியார் என்பதை வெளிப்படுத்த, பல்வேறு முயற்சிகளை எடுத்ததாம். அதில் எதிர்பாராத அளவுக்கு ட்விஸ்ட்டை தந்தது 'சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிதான்..

போலீஸ்
இந்த விவகாரத்தில் காவல்துறையும் இறங்க, இறுதியில் அன்னபூரணியின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது... போதாக்குறைக்கு இந்து அமைப்பினர் அளித்த 5 புகார்கள் நிலுவையில் உள்ளது. இந்த புகார்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பது பற்றி போலீசாரும் ஆலோசித்து வருகிறார்கள். தன்னுடைய பிரச்சனைக்கு கமிஷனர் ஆபீசில் புகார் ஒன்று தரப்போனால், இறந்துபோன அரசு விவகாரம் விஸ்வரூபமெடுத்து நின்றது..

மர்மமரணம்
இதை அன்னபூரணியே எதிர்பார்த்திருக்க மாட்டார்.. அரசுவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது மனைவி, அம்பத்தூர் ஸ்டேஷினில் அடுத்த புகார் தரப்பட்டுவிட, அதுவும் புயலை கிளப்பி கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, அன்னபூரணி நடத்தும் முகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கு தரப்படும் பிரசாதத்தில் ஏதேனும் மயக்கும் வஸ்து கலந்துள்ளதா? என்று போலீஸ் விசாரணையை துவக்கி உள்ளதாக தெரிகிறது.. மக்கள் தன்னை நம்பி திரளும்போதெல்லாம் அவர்களிடம் அதிக அளவில் காணிக்கையாக பணத்தை கறந்ததாகவும் கூறப்படுகிறது..
Recommended Video

விஐபிக்கள்?
அதுகுறித்து இனி விசாரிக்க முடிவு செய்துள்ளனராம்.. அதில் பெரிய அளவில் பணத்தை இழந்தவர்கள் யாராவது இருக்கின்றனரா என்றும் விசாரணை நடக்க முடிவாகி உள்ளது.. அதேபோல விஐபிக்கள் பலரும் அன்னபூரணி சாமியாரிடம் நேரில் சென்று அருள்வாக்கு பெற்றுள்ளதாகவும் சொல்கிறார்கள்.. இது தொடர்பாகவும் போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்... இதன் முடிவில்தான், அன்னபூரணி சாமியாருடன் தொடர்பில் இருந்த அந்த முக்கிய பிரமுகர்கள் யார் யார் என்பது தெரிய வரும்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications