"ஒரே செல்லில் 2 சிம்".. ஒரே ஏரியாவில் 2 மனைவி.. தவித்த ரஷீத்.. கத்திக்குத்தில் முடிந்த சண்டை!
ஒரு செல்போனில் 2 சிம் போடலாம். ஓரே ஏரியாவில் இரண்டு மனைவிகளை தனித்தனியாக குடிவைத்த ரஷீத் வாழ்க்கையில் தினமும்
சென்னை: ஒரு செல்லுக்கு 2 சிம் போட்டாவே சிக்கல் இருக்கிறப்ப ரெட்ஹில்ஸ்ல 2 பொண்டாட்டி கட்டுன ரஷீத் பாடு எப்படியிருக்கும். மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடிபோல ரஷீத் வாழ்க்கையில் தினம் தினம் அடிதடிதான்.
முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது பெண்ணை திருமணம் செய்து அந்த 2 பேரையும் ஒரே ஏரியாவில் குடி வைத்த ரஷீத் வாழ்க்கையில் தினம் தினம் சூறாவளிதான்.
புயல் கரையை கடந்தது போல முதல் மனைவியின் கோபத்திற்கு ஆளான இரண்டாவது மனைவி கத்துக்குத்து பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல் மனைவி சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார்.

செங்குன்றத்தில் சம்பவம்
செங்குன்றம் பாடியநல்லூர் ஜோதி நகரைச் சேர்ந்த முகமது ரஷீத், இறைச்சிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுராகாத்தூன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரும் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக போய் கொண்டிருந்த நிலையில் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவதாக ஜூனைரா பேகம் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது திருமணம்
ஜூனைரா பேகம் முகம்மது ரஷீத்தின் உறவுக்கார பெண் ஆவார். நாளடைவில் இந்த விசயம் சுராகாத்தூனுக்கு தெரியவே குளிர்விட்டுப்போனது ரஷீத்திற்கு. செங்குன்றம் பகுதியிலேயே இரண்டாவது மனைவியையும் குடி வைத்தார். பின்னர்தான் சிக்கல் தொடங்கியது.

கத்திக்குத்து
தினசரியும் சண்டை சச்சரவுதான். இரண்டு மனைவிகளும் மாறி மாறி சண்டை போட்டு தலைவலியை ஏற்படுத்தினர். நேற்றும் இதே போல சண்டை தொடங்கியது. ஒருவரை ஒருவர் திட்டி சண்டை போட்டுக்கொண்டு இருந்த நிலையில் வீட்டிற்குள் போய் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்த சுராகாத்துன் தன்னை திட்டிக்கொண்டிருந்த ஜூனைரா பேகத்தின் முகத்தில் குத்தி கிழித்தார். இதில் ரத்தகாயமடைந்த ஜூனைனா மயக்கமானார்.

சிறை கம்பிகளுக்குப் பின்னால்
அக்கம் பக்கத்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்தனர். ஜூனைனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்தியால் குத்திய சுரா காத்துன் இப்போது கம்பிக்கு பின்னே அழுது கொண்டிருக்கிறார். ஆண் செய்த தவறினால் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு குழந்தைகளும் சிறைக்குப் போன அம்மாவை நினைத்து அழுது கொண்டிருக்கின்றனர்.
-
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!












Click it and Unblock the Notifications