பட்ட பாடெல்லாம் போச்சே.. கல்லறை தோட்டத்தில் மீட்கப்பட்ட உதயா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியால் மீட்கப்பட்ட நபர் இன்று உயிரிழந்தார்
சென்னை: கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த நபரை, இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் டிபி. சத்திரம் கல்லறையின் ஊழியர் உதயா.. இவர் கனமழை காரணமாக கல்லறையிலேயே நேற்று முன்தினம் இரவு தங்கியுள்ளார்..
தொடர்ந்து மழையில் நனைந்து கொண்டும் இருந்திருக்கிறார்.. ஏற்கனவே உடல்நலம் சரியில்லாத நிலையில், அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்..

கல்லறைரங்கள்
அந்த கல்லறை பகுதியிலேயே இரவு நேரத்தில் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.. நேற்று காலை அந்த பகுதி மக்கள் இதை பார்த்து அதிர்ந்து போனார்கள். மது போதையால், உதயா அசையாமல் இருந்ததால், உயிரிழந்தார் என்று நினைத்து போலீசுக்கு தகவல் அளித்தனர்...சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர் உயிருடன் இருப்பதை அறிந்து, தாமே தனது தோளில் சுமந்து சென்று ஒரு ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உதயாவை அனுப்பிவைத்தார்..

மீட்பு
சரியான நேரத்தில் வந்து உதயாவை தோளில் சுமந்து உயிரைக் காத்த ராஜேஸ்வரிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.. ராஜேஸ்வரி உதயாவை தோளில் சுமந்து செல்லும் போட்டோவும் இணையத்தில் வைரலானது.. மநீம தலைவர் கமல்ஹான், பாமக அன்புமணி உள்ளிட்டோர் ராஜேஸ்வரிக்கு பாராட்டு தெரிரவித்தனர். அதேபோல, முதல்வர் ஸ்டாலினும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்..

பாராட்டு
தனது ட்விட்டர் பக்கத்தில், " நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன் என்றும், தன்னலம் பாராத உங்களது சேவையாலும் தியாகத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் துயர் துடைக்கப்படுகிறது. இயல்பு நிலை முழுமையாக விரைந்து திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம்! மக்களைக் காப்போம்! உங்கள் தியாகம் விலைமதிப்பில்லாதது! உங்கள் சேவை மகத்தானது! உங்கள் உள்ளத்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!" என்றும் முதல்வர் பதிவிட்டிருந்தார்.
Recommended Video

உயிரிழப்பு
இதனிடையே, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த உதயாவுக்கு தீவிர சிகிச்சையும் நடந்து வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்துவிட்டார்.. சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.. நேற்றைய தினம் அவர் மதுபோதையில் இருப்பதாக மட்டுமே கருதப்பட்டது.. ஆனால், உதயாவுக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்ததாகவும் கூறப்படுகிறது.. எப்படியாவது உதயா குணமாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications