கல்லறையில் மயங்கி விழுந்த நபர்.. தோளில் தூக்கிப்போட்டு மீட்ட பெண் இன்ஸ்பெக்டர்.. கமல்ஹாசன் பாராட்டு
மயங்கி விழுந்த நபரை காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டருக்கு கமல் வாழ்த்து கூறியுள்ளார்
சென்னை: "சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரைக் காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது" என்று மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் டி.பி. சத்திரம் கல்லறையின் ஊழியர் உதயா.. இவர் கனமழை காரணமாக கல்லறையிலேயே நேற்றிரவு தங்கியுள்ளார்..
தொடர்ந்து மழையில் நனைந்து கொண்டும் இருந்துள்ளார்.. இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது.. அப்படியே நிலைகுலைந்து மயங்கி கல்லறையிலேயே விழுந்துள்ளார்.

அதிர்ச்சி
இன்று காலையில், இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் மரம் விழுந்ததினாலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக கருதி, உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்... இதையடுத்து டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அங்கு விரைந்து வந்து பார்த்தபோதுதான், உதயாவுக்கு உயிர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உதயாவை தன்னுடைய முதுகில் தூக்கிக் கொண்டு நடந்து வந்து, ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்... உதயாவுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.

தண்ணீர்
இதுகுறித்து ராஜேஸ்வரி சொல்லும்போது, "இன்று காலை ஷெனாய் நகர் கல்லறைக்கு அருகே, ஒருவர் இறந்துகிடப்பதாக தகவல் வந்தது... தண்ணீரில் உடல் முழுவதும் ஊறிய நிலையில் மிதந்து கொண்டிருந்த அவரை நான் மீட்டேன்... சம்பந்தப்பட்ட நபர், குடிபோதையில் அங்கிருந்த மரத்தின் அடியில் படுத்திருந்திருக்கிறார். சுயநினைவு இல்லாமல், தண்ணீரிலேயே ஊறிப்போய் மயங்கி விழுந்துள்ளார்.

சுயநினைவு
உடல் விறைத்து சுய நினைவு இல்லாமல் இருந்த அவரை தண்ணீரில் இருந்து தூக்கும்போது, இறந்துவிட்டார் என்றுதான் நினைத்தேன்... ஆனால், முதலுதவிகள் செய்து பார்த்தபோது, அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது... பிறகு, அவரை தூக்கி என் தோள்பட்டையில் வைத்துக்கொண்டு ஓடி வந்து, அங்கிருந்த ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தேன்" என்றார் ராஜேஸ்வரி.

கமல்
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்த செயலுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.. அந்த வகையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார்.. இதுகுறித்து ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார்.. அதில், "சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரை காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.அவரது வீரமும், சேவையும் போற்றுதலுக்குரியவை. முன்னுதாரண அதிகாரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.












Click it and Unblock the Notifications