மரம் விழுந்து உயிரிழந்துவிட்டதாக கருதப்பட்ட நபர்! தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்!
மயங்கி விழுந்த ஊழியரை தோளில் சுமந்து, ஆட்டோவில் ஏற்றியுள்ளார் பெண் இன்ஸ்பெக்டர்
சென்னை: கீழ்ப்பாக்கம் கல்லறையில் மரம் விழுந்து பலியாகிவிட்டதாக கருதப்பட்ட இளைஞரை தோளில் சுமந்து மருத்துவமனையில் அனுமதிக்க உதவியதுடன், அவரது உயிரையும் காப்பாற்றி உள்ளார் பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி.. இதையடுத்து அவரது நெகிழ்ச்சி செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Recommended Video
தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.. இன்று மாலைதான் புயல் கரையை கடக்க போகிறது.. தொடர்ந்து கனமழை இருக்கும் என்றும் எச்சரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.
இதில் அதிக அளவு சென்னை பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.. கடந்த 4 நாட்களாகவே மீட்பு பணியின் பிடியில் சென்னை உள்ளது.. 4 நாட்களுமே தமிழக முதல்வர் நேரடி ஆய்வில் உள்ளார்..

அமைச்சர்கள்
அதிகாரிகள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், மாநகராட்சி ஊழியர்கள், என மொத்த பேரும் களத்தில் இறங்கி, மக்களை நேரடியாக சந்தித்து வருகின்றனர்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் தரப்பட்டு வருகிறது.. அந்த வகையில், சென்னை கீழ்ப்பாக்கம் டி.பி.சத்திரமும் மழை பாதிப்புக்கு உள்ளான பகுதியாகும்..

குடியிருப்பு பகுதிகள்
இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் மழைநீர் அப்பகுதி முழுவதும் சூழ்ந்தது. இதனால், குடியிருந்த மக்கள் கடும் அவதிப்பட்டு வந்த நிலையில், அண்ணா நகர் எம்எல்ஏ எம்.கே.மோகன் நிவாரண உதவிகளை வழங்கினார்.. அதேபோல, கனமழையால் பாதிக்கப்பட்ட இந்த பகுதியை தயாநிதி மாறனும் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

கல்லறை
இந்நிலையில், டி.பி. சத்திரம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்பவர் கனமழை காரணமாக கல்லறையிலேயே நேற்றிரவு தங்கியுள்ளார்.. தொடர்ந்து மழையில் நனைந்து கொண்டும், இருந்துள்ளார்.. இதனால் அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது.. இதில் நிலைகுலைந்து மயங்கி கல்லறையிலேயே விழுந்துள்ளார் உதயா. அவருக்கு ஏற்கனவே வலிப்பு நோயும் இருப்பதாக கூறப்படுகிறது.. அதேசமயம், நேற்றிரவு கல்லறை பகுதியில் நிறைய மரங்களும் முறிந்து விழுந்துள்ளன..

சிகிச்சை
இந்நிலையில், இன்று காலையில், இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள், அதிர்ச்சி அடைந்து, அவர் மரம் முறிந்து விழுந்து இறந்துவிட்டதாக கருதி, உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்... இதையடுத்து, டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி கீழ்ப்பாக்கம் கல்லறைக்கு விரைந்தார். அங்கு உதயாவை சுற்றிலும் முறிந்து விழுந்திருந்த மரங்களின் கிளைகளை அகற்றி, உதயாவை மீட்டார்... அப்போதுதான் உதயாவுக்கு உயிர் இருப்பதும், அவர் மயக்கத்தில்தான் இருக்கிறார் என்பதும் தெரியவந்தது..

பாராட்டுக்கள்
இதையடுத்து, உதயாவை தனது தோளிலே தூக்கிக்கொண்டு கீழ்ப்பாக்கம் கல்லறையில் இருந்து வெளியே வந்தார் ராஜேஸ்வரி.. அங்கிருந்த ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இறந்துவிட்டதாக கருதப்பட்ட நபர் உயிருடன் இருப்பதை அறிந்து, மருத்துவமனைக்கு அனுப்பி உயிரையும் காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் இந்த நெகிழ்ச்சி செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
-
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!












Click it and Unblock the Notifications