பாஜக கூட்டணி பிளவுக்கு நடுவே.. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்ற எடப்பாடி! என்ன சொன்னார் தெரியுமா
சென்னை: தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ள நியைில் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் மகளிர் இடஒதுக்கீடு விஷயத்தில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக அதிமுக உள்ளது. இந்த மசோதாவை அதிமுக வரவேற்கிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சட்டசபை, நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு அதிகமாக பங்களிப்பு செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா கடந்த 27 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற பிரதமர் மோடி தலைமயைிலான மத்திய அரசு முடிவு செய்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இந்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து நேற்று லோக்சபாவில் மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜூன்ராம் மெஹ்வால் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை தாக்கல் செய்தார்.
இதையடுத்து இன்று விவாதம் நடந்து வருகிறது. இந்த மசோதா மீது காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்கள் இன்று பேசினர். இந்த மசோதா என்பது மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தான் 2029 நாடாளுமன்ற தேர்தலில் அமலில் வரும் என கூறப்படும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓபிசி பிரிவினருக்கு உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா குறித்து அதிமுக தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. தமிழகத்தில் அதிமுக-பாஜக இடையேயான மோதல் என்பது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதோடு இது தனது தனிப்பட்ட கருத்து இல்லை. இது கட்சியின் முடிவு என அவர் கூறியுள்ளார்.
இதனால் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இத்தகைய சூழலில் தான் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அதிமுக வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"பெண்களைப் பாதுகாப்பது மற்றும் அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டும் உண்மையான பெண் சுதந்திரம் ஆகாது. நாட்டை வழி நடத்துவதிலே பெண்களுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும்" என்ற கருத்தை முன்வைத்து தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடும் பின்னர் அதையே 2016ல் 50% இடஒதுக்கீடாக உயர்த்தி வழங்கி பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா தான்.
அதேபோல் 1991ல் முதன்முதலாக ஆட்சி அமைத்த போதுதான் 31பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவுடன் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்தது அஇஅதிமுக மட்டும் தான் என்பதில் பெருமை கொள்வதோடு, அதனை முன்மாதிரியாக கொண்டு நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதற்கும் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்?












Click it and Unblock the Notifications