ட்ரோல்! வசமாய் சிக்கிய திமுகவின் பத்மபிரியா! மகளிர் இடஒதுக்கீடு கேள்வியால் வந்த பிரச்சனை! என்னாச்சு
சென்னை: நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசேதாவை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து கேள்வி எழுப்பி திமுகவின் ஐடி விங்க் மாநில துணை செயலாளர் பத்ம பிரியா சிக்கலில் சிக்கியுள்ளார். அதோடு அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் சட்டசபை, நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு அதிகமாக பங்களிப்பு செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா கடந்த 1996ல் கொண்டு வரப்பட்டது. அப்போது கர்நாடகாவை சேர்ந்த தேவேகவுடா பிரதமராக இருந்தார். ஆனால் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.

அதன்பிறகு மறைந்த பிரதமர் வாஜ்பாய் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசிலும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் நிறைவேற்றி நடைமுறைப்படுத்த முடியவில்லை. இருப்பினம் கடந்த 2008ல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்த மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றியது. ஆனால் லோக்சபாவில் அறிமுகம் செய்யவில்லை.
இதனால் இந்த மசோதா என்பது கடந்த 27 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான் நேற்று லோக்சபாவில் பிரதமர் மோடி தலைமயைிலான மத்திய பாஜக அரசு பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகம் செய்தது. மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று விவாதம் நடந்து வருகிறது.
முன்னதாக இந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகை கங்கனா ரணாவத் உள்பட இந்தியாவை சேர்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த பெண் ஆளுமைகள் பங்கேற்றனர். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் இணையதளங்களில் வெளியானது.
இந்நிலையில் தான் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக திமுகவின் ஐடி விங்க் பிரிவின் மாநில துணை செயலாளரான பத்ம பிரியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இவர் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து திமுகவில் இணைந்த நிலையில் நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛புதிய நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா அறிமுகம் செய்வதற்கு கங்கனா ரனாவத் ஏன் அழைக்கப்பட்டுள்ளார்? ஏன் ஜனாதிபதி திரெளபதி முர்மு அழைக்கப்படவில்லை?'' என கேள்வி கேட்டார்.
அதோடு மசோதா அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற கங்கனா ரணாவத் உள்ளிட்டவர்களின் போட்டோ மற்றும் ஜனாதிபதி திரெளபதி முர்முவின் போட்டோவை தனியாக போட்டு இந்த கேள்வியை எழப்பி இருந்தார். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு அழைக்கப்படாதது போல் இப்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கும் அவரை மத்திய அரசு புறக்கணித்து இருக்கிறதா? எனும் வகையில் கேள்வி எழுப்பி இருந்தார்.
ஆனால் இந்த கேள்வியில் நியாயம் இல்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளதோடு இப்படி கேள்வி கேட்ட பத்ம பிரியாவை கமெண்டில் விமர்சனம் செய்து வருகின்றனர். அதாவது, ‛‛மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு அதற்கு ஜானதிபதி திரெளபதி முர்மு தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். இப்படி இருக்கும் சூழலில் மசோதா அறிமுகத்துக்கு அவரை எப்படி அழைக்க முடியும்?'' என கேள்வி கேட்டு பத்மபிரியாவை விளாசி வருகின்றனர்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications