ஆணாதிக்கம் மிகுந்த காலத்தில் சாதித்தவர்.. இந்தியாவின் முதல் பெண் இயக்குநர் யார் தெரியுமா?
சென்னை: மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தற்போதைய நவீன காலத்தில் விண்வெளி முதல் ஆட்டோ டிரைவர் என பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் கால் பதித்தாலும், ஆணாதிக்கம் மிகுந்த காலத்திலேயே முதல் பெண் இயக்குனராக திரையுலகில் சாதித்த பெண்ணை பற்றி இங்கு பார்க்கப் போகிறோம்.
ஆண்களுக்கு நிகராக பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். சொல்லப்போனால் ஆண்களை விட ஒருபடி மேலே சென்று சாதித்து வருகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.. விண்வெளி முதல் ஆட்டோ டிரைவர் என பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகிறார்கள்.

இந்தியாவின் முதல் பெண் இயக்குநர்
சினிமா துறையிலும் பெண்கள் எட்டிபிடிக்காத உயரம் இல்லை. இயக்குநராகவும் இன்று திரையுலகில் பல முன்னணி டைரக்டர்கள் சாதித்து வருகிறார்கள். மகளிர் தினமான இன்று பெண்களின் முக்கியத்துவத்தை போற்றும் விதமாக பெண் சாதனையாளர்களை குறித்த தொகுப்புகளை சிறப்பு தொகுப்பாக ஒன் இந்தியா தமிழ் வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் முதல் பெண் இயக்குநர் யார்? என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவின் முதல் பெண் சினிமா இயக்குனர் என்ற பெருமையை பெற்றவர் ஃபாத்மா பேகம். 1892 ஆம் ஆண்டு உருது பேசும் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த பாத்மா பேகம், 1940, 50 களில் ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த சினிமா உலகில் தனது அசாத்திய திறமையால் கால் பதித்து, இந்தியாவின் முதல் பெண் இயக்குநர் என்ற பெருமையை பெற்றார். பாத்மா பேகத்தை முதல் பெண் இயக்குநர் என்று மட்டும் சுருக்கிவிட முடியாது.
வீர அபிமன்யூ திரைப்படம்
இந்திய சினிமாவின் எதிர்காலத்தை செதுக்கியவராகவும் முக்கிய பங்காற்றினார். எதையும் எதிர்கொண்டு வரும் திறன், படைப்பாற்றல், தொலை நோக்கு பார்வை ஆகியவையே அவருக்கு சினிமா உலகில் சாதிக்க வழியை ஏற்படுத்தி கொடுத்தது. வெறும் இயக்குநராக மட்டும் இன்றி நடிகை, திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார். "பாத்மா பிலிம்ஸ்" என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சினிமா படங்களை தயாரிக்கவும் செய்தார்.
பாத்மா பேகம் 1922 ஆம் ஆண்டு தனது 30 வயது வயதில் தனது முதல் படத்தை நடித்தார். வீர அபிமன்யூ என்ற படத்தில் அபிமன்யூ கேர்க்டரில் நடித்தார். ஊமை படமான இந்த படத்தை ஆர்தேஷிர் இரணி இயக்கினர். சினிமா துறை ஆண்கள் ஆதிக்கம் மிகுந்ததாக இருந்த அந்த கால கட்டத்தில் பெண் கதாப்பாத்திரம் கூட ஆண் நடிகர்களே நடித்தனர்.
முக்கியத்துவம் வாய்ந்த கதைகள்
1926 ஆம் ஆண்டு பாத்மா பேகம் திரைப்பட கம்பெனியை நிறுவினார். திரைப்பட தயாரிப்பு கம்பெனியை நடத்திய முதல் பெண் என்ற பெருமையும் பெற்றார். பாத்திமா பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். பிறகு விக்டோரியா - பாத்திமா பிலிம்ஸ் என 1928-ல் பெயர் மாற்றது. புல்புல் இ பரிஸ்தான் என்ற படத்தை அவர் முதன் முதலாக இயக்கினார். பேண்டசி படமாக உருவக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த படத்தின் பிரிண்ட் எதுவும் தற்போது இல்லை. எனினும் பல பேண்டசி படங்களுக்கு இதுவே மையப்புள்ளியாக அமைந்தது. இந்திய சினிமாவிற்கு பாத்மா அளித்த பங்களிப்பு புரட்சிகரமானவை என்றே சொல்லலாம். அரிதாகவே அப்போது பெண்களுக்கு சினிமாவில் இடம் கிடைக்க கூடிய நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை உருவாக்கினார். Goddess of Love (1927) மற்றும் சகுந்தலா (1929) என குறிப்பிடத்தக்க படங்களை இவர் இயக்கினார்.
எனினும், 1929ல் அவரது ஸ்டூடியோவிற்கு சட்ட ரீதியாக சில சிக்கல்கள் வந்தன. இதனால் அவரது திரைப்பயணத்திற்கும் அது முடிவுரை எழுதியது. அவரது பல படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட அவர் விட்டு சென்ற பாரம்பரியம் பின்னாட்நாட்களில் பல பெண் திரைப்பட இயக்குநர்களுக்கு முன்னோடியாக விளங்கியது. இந்தியாவின் முதல் பேசும் படமான ஆல்ம் ஆரா Alam Ara (1931) வில் கதாநாயகியாக இவரது மகள் ஸூபேய்டாவே நடித்தார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications