''அண்ணி வணக்கம்ங்க''! துர்கா ஸ்டாலினை சூழ்ந்த திமுக மகளிரணியினர்! மகளிர் உரிமை மாநாடு ருசிகரம்!
சென்னை: திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள வந்த முதலமைச்சர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு, திமுக மகளிரணி நிர்வாகிகள் போட்டிப் போட்டுக்கொண்டு வணக்கம் சொன்னதை காண முடிந்தது.
கவுன்சிலர் முதல் பெண் அமைச்சர்கள் வரை துர்கா ஸ்டாலினை பார்த்ததும் நேராக அவரது இருக்கைக்கே சென்று வணக்கம் வைத்து தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர். அதேபோல் முதலமைச்சர் முக ஸ்டாலினின் சகோதரி செல்விக்கும் திமுக மகளிரணி நிர்வாகிகள் அவரது இருக்கைக்கே தேடி வந்து வணக்கம் சொல்லிவிட்டு சென்றனர்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் திமுக மகளிர் உரிமை மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. அதில் மாநாட்டு மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினை தவிர துரைமுருகன் உட்பட வேறு எந்த நிர்வாகிகளுக்கும் அனுமதி தரப்படவில்லை. முழுக்க முழுக்க பெண் தலைவர்கள் மட்டுமே மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தருவதற்கு முன்பே தனியாக ஆரவாரமின்றி மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்த துர்கா ஸ்டாலின், முதல் வரிசையில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர தயங்கியவாறு இரண்டாவது வரிசையில் இருந்த சோஃபாவில் அமர முயன்றார். அப்போது அங்கிருந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., விஜயா தாயன்பன், அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் துர்கா ஸ்டாலினை வலியுறுத்தி முதல் வரிசை சோஃபாவில் அமர வைத்தனர்.
துர்கா ஸ்டாலின் சோஃபாவில் அமர்ந்தது தான் தாமதம், திமுக மகளிர் அணி நிர்வாகிகள் கும்பலாக அவர் முன்னால் கூடிவிட்டனர். எத்தனை பேருக்கு தான் வணக்கம் வைப்பது என்ற தர்ம சங்கடத்திற்கு தள்ளப்பட்டார் துர்கா ஸ்டாலின். இதனிடையே இருக்கைகளை ஒழுங்குப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் மா.சுப்ரமணியன், மகளிர் அணி நிர்வாகிகள் திடீரென இருக்கைகளில் இருந்து எழுந்து கலைந்ததால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தார்.
அதேபோல் செல்விக்கு வணக்கம் வைப்பதற்காக திமுக மகளிர் அணி நிர்வாகிகள் போட்டி போட்டனர். இதனிடையே தனது அண்ணியையும், அக்காவையும் வரவேற்க அவர்களது இருக்கைகள் அருகே சென்ற கனிமொழி, இருவர் வருகைக்காகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications