அக்.14ல் மகளிர் உரிமை மாநாடு! அறிவாலயத்தில் நடந்த டிஸ்கஷன்! பம்பரமாக சுழலும் கனிமொழி!
சென்னை: அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் குறியாக உள்ள கனிமொழி எம்.பி., மாநாடு தொடர்பான பணிகளில் பம்பரமாக சுழன்று வருகிறார்.
அரசு வேலைவாய்ப்பிலும் - உள்ளாட்சித் தேர்தலிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளிட்டவற்றை முதலமைச்சராக இருந்த போது சட்டமாக்கியவர் கருணாநிதி. இதனால் தான் அவரது நூற்றாண்டை பெருமைப்படுத்தும் நோக்கில் இத்தகைய மாநாடுக்கு கனிமொழி ஏற்பாடு செய்துள்ளார்.

மகளிர் உரிமை மாநாட்டில் அகில இந்திய அளவிலான முக்கியத் பெண் தலைவர்கள் பங்கேற்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கி மாநாடு மேடை வரை பார்த்து பார்த்து யோசனைகள் வழங்கி வருகிறார் கனிமொழி.
கலைஞர் நூற்றாண்டையொட்டி, திமுக மகளிர் அணி முன்னெடுக்கும் 'மகளிர் உரிமை மாநாடு' ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 14ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. மாநாடுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளதால், அது குறித்த ஆலோசனைக் கூட்டத்தை அண்ணா அறிவாலயத்தில் நடத்திய கனிமொழி, அமைச்சர் தாமோ அன்பரசனுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமைத் தொடர்பான கருத்துரையாடல் இந்த மாநாட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்", "பெண்களுக்குக் கட்டணமில்லா பயணத் திட்டம்", "புதுமைப் பெண் திட்டம்", "மகளிர் சுய உதவிக் குழுக்கள்", "மகளிரை அர்ச்சகராக்கியது" என திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சாதனைத் திட்டங்கள் பற்றியும் இந்த மாநாட்டில் பேசப்படும் எனத் தெரிகிறது.
கனிமொழியின் அழைப்பை ஏற்று திமுக மகளிர் உரிமை மாநாட்டில், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி, சுப்ரியா சுலே, சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்திய பெண் தலைவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.
இதனிடையே மகளிர் உரிமை மாநாட்டை தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications