Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஞ்சறைப்பெட்டி அதிர்ஷ்டம் தரும் பெட்டி.. அஞ்சறைப் பெட்டி என்ற மருத்துவ பெட்டி! கிச்சனில் ஓர் அதிசயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அஞ்சறைப்பெட்டியை நம்முடைய முன்னோர்கள் வீடுகளில் கட்டாயம் வைத்திருந்து பயன்படுத்தியதன் காரணம் என்ன தெரியுமா? செலவுப்பெட்டி என்று சொல்லக்கூடிய இந்த அஞ்சறைப்பெட்டிகள் ஆன்மீகத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளதற்கு என்ன காரணம் தெரியுமா? நவீன காலத்திலும்கூட, அஞ்சறைப்பெட்டிகள் மதிப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது, பல காரணங்கள் உள்ளன.. அவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

வீட்டு பெண்களை திருமணம் செய்து மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைக்கும்போது, சீர் வரிசைகளையும் சேர்த்து தருவார்கள்.. அதில் அஞ்சறைப்பெட்டியே முதன்மையாக இடம்பெறும்..

வேதிப்பொருட்களின் கலவை

காரணம், பல்வேறு மருத்துவ குணமுள்ள வேதிப்பொருட்களின் கலவைகளை, காலம் காலமாக, இந்த அஞ்சறை பெட்டியில் வைத்து பராமரிக்கப்பட்டுள்ளன. இப்போது ஸ்டீல், பிளாஸ்டிக்கில் அஞ்சறைப்பெட்டிகள் கிடைக்கின்றன என்றாலும், முன்பெல்லாம் மர வகைகளை பயன்படுத்தியே அஞ்சறைப்பெட்டி தயார் செய்வார்களாம். இதனால், அதில் பயன்படுத்தப்படும் மளிகை பொருட்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்குமாம்.

ஐந்து + அறை + பெட்டி என்பதுதான் அஞ்சறைப்பெட்டியாக மாறியிருக்கிறது.. பெயருக்குதான் ஐந்து அறை என்கிறார்களே தவிர, 7, 9 என்ற ஒற்றை இலக்க எண்களில் அஞ்சறை பெட்டிகள் உள்ளன..

மருத்துவ நன்மைகள்

சீரகம், சோம்பு, மிளகு, மஞ்சள், வெந்தயம், கடுகு, தனியா, பெருங்காயம், லவங்கப்பட்டை, கிராம்பு போன்ற மருந்துகள் இந்த அஞ்சறை பெட்டிக்குள் வைத்துள்ளனர்.. இவை அனைத்துமே வாசனை பொருட்கள் என்பது மட்டுமல்ல, உடலில் ஏற்படும் பெரும்பாலான நோய்களை தீர்க்கக்கூடிய மருந்துகளாகும்.இதிலுள்ள ஒவ்வொரு பொருளும், பலவிதமான மருத்துவ நன்மைகளை தரக்கூடியது. எனவே, குடல் புற்றுநோய் முதல், அஜீரணம், வாதம், பித்தம், சளி, இருமல், உடல் பருமன், போன்றவற்றை முன்கூட்டியே தடுக்கக்கூடிய அற்புத சக்தி கொண்ட பொருட்களாகும்..

பெரும்பாலும், உடலில் தோன்றும் எல்லாவிதமான நோய்களுக்கும் அடிப்படையான காரணமாக சொல்லப்படுவது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான்.. அப்படியான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உரிய முறையில் கையாள நமக்கு உதவியாக இருப்பது, இந்த அஞ்சறைப்பெட்டிதான்.

ஆன்மீகம் - முக்கியத்துவம்

மருத்துவ ரீதியாக மட்டுமல்ல, ஆன்மீகத்திலும் அஞ்சறைப்பெட்டிக்கு முக்கியத்துவம் உண்டு.. சமையலறையில் அம்மி, ஆட்டுக்கல், உரல், அரிசி அளக்கும் படி, முறம், உப்பு ஜாடி, ஊறுகாய் ஜாடி போன்றவைகளில் அன்னபூரணி வாசம் செய்வாள் என்பார்கள்.. அதுபோலவே, அஞ்சறை பெட்டியிலும் அன்னபூரணி நிறைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

காரணம், மிளகு, மஞ்சள், வெந்தயம், கடுகு போன்ற பெரும்பாலான பொருட்கள் மகாலட்சுமிக்கு மாலை கோர்த்து சாற்றி வழிபட உதவுகிறது.. இன்னல்களை தீர்க்கும் எளிய பரிகாரங்கள் செய்வதற்கும் இந்த பொருட்களே பரிகாரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.. அதனால்தான், அஞ்சறைப்பெட்டியிலுள்ள பொருட்கள் எக்காரணம் கொண்டும் குறைவின்றி பார்த்து கொள்ள வேண்டுமாம்..

புதன்கிழமைகளில் பூஜை

எந்த வீட்டில் அஞ்சறைப்பெட்டியில் பொருட்கள் நிறைந்து வழிகிறதோ, அந்த வீட்டில் மகாலட்சுமியும் நிறைந்திருப்பாள்.. மேலும், புதன்கிழமைகளில் அஞ்சறை பெட்டியில் அனைத்து பொருட்களையும் நிரப்பி வைத்து, பூஜை செய்யலாம்.. அப்போது, இந்த நெய் விளக்கு ஒன்றை ஏற்றி வழிபட வேண்டும். இதனால் நிதி சிக்கல் தீர்ந்து, செல்வ வளத்தை பெருக்கி, தடைகளையும் நீக்கும் என்பார்கள்.

ஆக, எவ்வளவுதான் நவநாகரீகம் மாறினாலும், பழமை மாறாத இந்த அஞ்சறைப்பெட்டியானது, நம்மை பத்திரப்படுத்திக்கொண்டே, நம்முடன் சேர்ந்து பயணித்து கொண்டிருக்கிறது இன்னமும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+