Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறு, குறு விவசாயிகளுக்கு குட்நியூஸ் தந்த பிரதமர்! பிஎம் திட்டத்தில் இதென்ன புதுஸா? நம்பர் கவனியுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக, 6,000 ரூபாய் வழங்கப்படும் பிரதமர் கிஸான் திட்டத்தின் தவணை தொகை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.

பிஎம் கிசான் எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டமானது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள மிக முக்கியமான திட்டமாகும்.. பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்றும் இதனை சொல்லலாம்.

PM Kisan Yojana Central Government

சபாஷ் மத்திய அரசு: பி.எம். கிசான் திட்டம், இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காகவே மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட திட்டமாகும்.. விவசாயிகளுக்கு பண உதவிகளை, ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு வருடத்துக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்கிறது மத்திய அரசு.

இந்த உதவிப்பணத்தை கொண்டு, விவசாயிகள் மானிய விலையில் தங்களது விவசாயத்திற்கு தேவையான உரப்பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியும் என்பது மிக முக்கியமான அம்சமான திகழ்கிறது.

வங்கி கணக்கு: கடந்த பிப்ரவரி 28ம் தேதி விவசாயிகளுக்கு 16வது தவணை விடுவிக்கப்பட்ட நிலையில், 4 நாட்களுக்கு முன்பு அதாவது ஜூன் 18ம் தேதியன்று பிரதமர் மோடி பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு தவணைப் பணத்தை அனுப்பி வைத்தார்.. இதன் மூலம் 9.3 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாயை அவர்களது வங்கி கணக்கில் வழங்க 20,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் 17ஆவது தவணை பணம் வங்கி கணக்கில் வரவில்லை என சில பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.. தவணை பணம் கிடைக்காமல் போக பல காரணங்கள் இருக்கலாம்.. எனவே, அந்த தவறுகளை உடனடியாக சரிசெய்ய e-KYC செயல்முறையை முடிக்கவேண்டும். வீட்டிலிருந்தே இந்த செயல்முறையை ஆன்லைனில் முடிக்கலாம். அல்லது உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள PM கிசான் சேவை மையத்திற்கு சென்று KYC செயல்முறையை முடிக்கலாம்.

புகார் எண்கள்: அப்படியும் தவணை வரவில்லை உங்களுக்கு வராவிட்டால் 1800-115-5525 என்ற ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்புகொண்டு புகார் கொடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இதையடுத்து, விவசாயிகளும் தங்களது தவணைப்பணத்தை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், பிரதமரின் பிஎம் கிசான் திட்டத்தை வைத்து, மோசடியை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர் சைபர் குற்றவாளிகள்.. அதாவது இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்த்து, தவணை பெற்றுத்தருவதாக கூறி, மொபைல் போன்களுக்கு லிங்க் அனுப்பி, பண மோசடிகளை செய்ய முயற்சி செய்து வருகிறார்களாம்.. அதனால்தான், மாநில சைபர் குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இதுகுறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளார்கள்..

அலர்ட் அறிவிப்பு: அந்த அறிவிப்பில், "பிரதமர் கிஸான் திட்டத்தின் பயனாளிகளை, தனி நபர்கள் தேர்வு செய்யவே முடியாது. உங்களிடம் நிலம் இருந்தால் போதும். அதற்கான ஆவணம், ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை, தனி நபர்கள் கேட்டால் தர வேண்டாம்.

"சைபர்" குற்றவாளிகள், மொபைல் போன்களுக்கு லிங்க் அனுப்பி, விவசாயிகளுக்கு தவணை தொகை பெற்றுத் தருவதாக, பண மோசடிக்கு முயற்சி செய்து வருகிறார்கள்.. அப்படி ஏதாவது லிங்க் வந்தால், 1930 என்ற எண்ணிற்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள். தேவையற்ற லிங்க் எதையும், கிளிக் செய்ய வேண்டாம். ஆதார் எண், ஓடிபி எண், வங்கி கணக்கு என்று, எந்தவிதமான விபரத்தையும் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+