Ride ரிப்பேரானதை விடுங்கள்! முதல்நாளே சென்னை வொண்டர்லா சென்றவர்களுக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா?
சென்னை: சென்னையில் மழை காரணமாக வொண்டர்லா பூங்காவில் முதல் நாளில் மின்வெட்டு ஏற்பட்டு நிறைய சவாரிகள் பாதியிலேயே நின்றன. இதற்காக அன்றைய தினம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வொண்டர்லா நிர்வாகம் Wondercare pass" என்ற புதிய வாய்ப்பு அறிவித்துள்ளது.

65 ஏக்கர் பரப்பளவில் ரூ 611 கோடியில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உலக புகழ்பெற்ற Bolliger and Mabillard எனும் ரோலர் கோஸ்டர் அமைகிறது. இது லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் இருக்கிறது.
பெரியவர்களுக்கு 42 சவாரிகள் உள்ளன. இவற்றில் 16 நீர் சவாரிகளாகும். குழந்தைகளுக்கென பிரத்யேகமாக 10 சவாரிகள் இருக்கும் எனவே மொத்தம் 52 சவாரிகள் இடம் பெற்றுள்ளன. இது கடந்த 1 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி முதல் வொண்டர்லா பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. அன்றைய தினம் கட்டணத்திலும் சலுகை விலை கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் 2ஆம் தேதி டிட்வா புயல் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் நிறைய பேர் வந்திருந்தனர்.
இந்த நிலையில் டிட்வா புயலால் தொடர் மழை காரணமாக அங்கிருந்த பல ரைடுகள் பாதியில் நின்றன. சில ரைடுகளில் மக்கள் சிக்கிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் பரவியது. அப்போது காசை திருப்பி கொடுங்கள் என ரைட் இன்சார்ஜ்களிடம் மக்கள் சண்டையிட்ட வீடியோவும் வைரலானது.
இந்த புகார்களுக்கு பதிலளித்த வொண்டர்லா நிர்வாகம் , முதல் நாளில் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு வருந்துகிறோம். புயல் பாதிப்பால் அடிக்கடி ஏற்பட மின்வெட்டால்தான் ரைடுகள் செயலிழந்தன என மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தனர்.
இதுகுறித்து வொண்டர்லாவின் நிர்வாக இயக்குநர் அருண் கூறுகையில், வொண்டர்லாவுக்கு வானிலைக்கு மத்தியிலும் 2000 பேர் வரை வந்தனர். டிசம்பர் 2 ஆம் தேதி ஏற்பட்ட மின் தடையால் சில சவாரிகளில் குறுகிய கால இடைநிறுத்தங்களை ஏற்படுத்தின. இதனால் ரைடுகள் ஆங்காங்கே நின்றுவிட்டது. மின்சாரம் சீரடையும் போது வழக்கமான பாதுகாப்பு நெறிமுறைகளின் ஒரு பகுதிதான் நீங்கள் வீடியோவில் பார்த்த ரிப்பேர் செய்த காட்சி.
எனவே மக்கள் நீண்ட நேரம் காத்திருந்ததற்கும், சிரமத்திற்கும் வருந்துகிறோம். எந்த சவாரியிலும் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை. இந்த இடை நிறுத்தங்கள் எல்லாம் வெளிப்புற மின்சார நிலையற்ற தன்மையால் மட்டுமே ஏற்பட்டன. வானிலை பிரச்சனையால்தான் சில ரைடுகளில் சிக்கல் ஏற்பட்டது. பூங்காவில் சவாரிகள் எல்லாம் பாதுகாப்பாகத்தான் இருந்தன என்பது உறுதியான ஒன்று என்றார்.
இந்த நிலையில் முதல் நாளில் ரைடுகள் செயல்படாததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு Wonder Care Pass என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் நாளில் வந்த அனைவருக்கும் வழங்கப்படும். அந்த பாஸை 2026ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற இன்பச் செய்தியை வொண்டர்லா நிறுவனம் அறிவித்துள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications