தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் அதிசயம் நடக்கும்.. என்ன சொல்கிறார் ரஜினி?
தமிழக அரசியலில் நாளை அதிசயம் நடக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
Recommended Video
சென்னை: தமிழக அரசியலில் நாளை அதிசயம் நடக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது பல விவாதங்களை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக அவரது ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி இதற்காக நேற்று விழா எடுக்கப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த கலந்து கொண்டு தனக்கும் கமலுக்கும் இடையிலான நட்பு குறித்து பேசினார்.
அதேபோல் தமிழக அரசியலில் கடந்த இரண்டு வருடங்களில் நடந்த அதிரடி மாற்றங்கள், ஆட்சி மாற்றங்கள், தேர்தல்கள் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

என்ன சொன்னார்
நடிகர் ரஜினிகாந்த் தனது பேச்சில், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதம் கூட தாங்காது என்றார்கள். நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடுமென 99% பேர் சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது. ஆட்சி நீடித்தது.

மிக கவனம்
அது மாதிரியான அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும். தமிழக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நாம் அரசியலை கவனமாக பார்க்க வேண்டும், என்றார்.

ஏன் இப்படி
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஏன் இப்படி சொல்கிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றது போல ஒரு அதிசயம் இன்னும் சில மாதங்களில் நடக்கும். அதிசயமாக புதிய நபர் ஒருவர் முதல்வராக பதவி ஏற்பார். சில மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

வருகை
தான் அரசியலுக்கு வருவதை உணர்த்தும் வகையில்தான் ரஜினிகாந்த் இப்படி கூறியதாக அவரின் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது தான் முதல்வர் ஆவேன் என்று ரஜினிகாந்த் மறைமுகமாக தெரிவித்துள்ளார். அவரின் அரசியல் வருகை விரைவில் நடக்கும் என்று ரஜினி இப்படி தெரிவித்துள்ளார் என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தப்பு கணக்கு
எடப்பாடி பழனிசாமியை எல்லோரும் தப்பு கணக்கு போட்டனர். அவரை எல்லோரும் எளிதாக வீழ்த்தி விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் முடியவில்லை. அதேபோல்தான் ரஜினியையும் சிலர் தப்பு கணக்கு போடுகிறார்கள் என்று அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று என்ன சொன்னார்
நேற்றுதான் ரஜினியின் அரசியல் வருகை குறித்து ரஜினியின் அண்ணன் சத்திய நாராயண ராவ் கெய்க்வாட் பேட்டி அளித்தார். ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். நல்லதை செய்வார்.ரஜினி மீது மக்கள் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.

மக்கள் நலன்
மக்களை கருத்தில் கொண்டு அவர் அரசியலுக்கு வருவார். ஆட்சிக்கு வந்தால் நன்றாக ஆட்சி செய்வார். அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவரே விரைவில் அறிவிப்பார், என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் ரஜினி அதிசயம் நடக்கும் என்று இலைமறைகாயாக குறிப்பிட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications