WFH சொல்லிட்டு ரயிலில் பயணம் செய்த சாப்ட்வேர் இன்ஜினியர்.. டீம் லீடிடம் சிக்கியது எப்படி தெரியுமா?
சென்னை: WFH பெர்மிஷனில் பணிபுரிந்து வரும் மென்பொருள் பொறியாளர் ஒருவர், அலுவலகத்தில் ஒரு அவசர விடுப்பு கேட்டிருந்தார். ஆனால், அவரது டீம் லீடு விடுப்பு தர மறுத்துவிட்டார். அந்த ஊழியரும் விடுவதாக இல்லை. விடுமுறை எடுக்காமல் வேலை செய்வதாகக் கூறிவிட்டு, ரயிலில் ஒரு ரகசியப் பயணத்தைத் தொடங்கினார். எல்லாம் திட்டமிட்டபடி நடந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத திருப்பமாக, டீம் லீடிடம் சிக்கியுள்ளார். எப்படி தெரியுமா?
கொரோனா சமயத்தில் ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு தற்போது பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் நிறுவனத்துக்கு அழைத்து கொண்டன. இருப்பினும் சில நிறுவனங்களில் இன்னும் கூட ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர் ஒருவர் ரயிலில் பயணித்தபடி வேலை செய்தபோது டீம் லீடிடம் சிக்கியதை தனது ரெடிட் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ஐடி ஊழியர் கூறியுள்ளதாவது:
ரயிலில் வைத்து பணி
எங்கள் அலுவலகத்தில் பணி செய்ய வேண்டும் என்றால் 100 Mbps வேகத்தில் இண்டர்நெட் சேவை இருக்க வேண்டும். நேற்று(சம்பவத்தன்று) தனிப்பட்ட காரணங்களால் நான் ரயிலில் பயணம் செய்தேன்.
அப்போது என்னுடைய டீம் லீடர் இண்டர்நெட் வேகத்தை செக் செய்ய வேண்டும் என்று கூறி என்னை ஸ்கிரீன் சேர் செய்யும்படி கூறினார். ரயில் ஒரு இடத்தில் நின்றது. இதனால் நான் எனது ஸ்கிரீனை சேர் செய்தேன். அப்போது இண்டர்நெட் 900KbPs(100 Mbps வேகத்துக்கு சற்று குறைவு) ஸ்பீடில் காட்டியது.
காபி வேண்டுமா? என கேட்ட வியாபாரி
இந்த சமயத்தில் என் அருகே உணவு விற்பனை செய்பவர் வந்தார். என்னுடைய மைக் ஆனில் இருந்தது. அப்போது அவர் காபி வேண்டுமா? என்று கேட்டார். அது எனது டீம் லீடுக்கும் மைக் வழியாக கேட்டது. மேலும் நான் வீட்டில் இல்லை என்பதை அவர் அறிந்து கொண்டார்.
உடனடியாக எனக்கு போன் செய்து அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி தங்களின் பணி எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை விளக்கினார். வேறு யாராக இருந்தால் எனக்கு வார்னிங் மெயில் அல்லது ஆபரேஷன் மேலாளரிடம் அனுப்பி இருப்பார்கள். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.
பதற்றமான ஊழியர்
இதையடுத்து நானும் வருத்தம் தெரிவித்தேன். மீண்டும் இப்படி செய்ய மாட்டேன் என்று கூறி மெசேஜ் அனுப்பினேன். ஒரு மணிநேரத்துக்கு பிறகு அவர் ஓகே என்று அனுப்பினார். இப்போது எனக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பொய் என் மீதான நம்பிக்கையை குறைக்குமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
அதேபோல் னெது நீண்டகால பணிக்கு ஆபத்தை தருமா? என்று யோசிக்கிறேன். அல்லது இது வார்னிங் தான் இனி இப்படி செய்யாதே? என்பதோடு முடிந்து விடுமா? என்ற கேள்விகள் எனக்குள் வந்துள்ளன'' என கூறியுள்ளார். தற்போது அவர் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
விடுப்பு எடுக்காதது ஏன்?
இதை பார்த்தவர்கள் எதற்காக விடுப்பு எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, ‛‛நான் எனது டீம் லீடரிடம் அரைநாள் விடுப்பு கேட்டேன். ஆனால் அவர் விடுப்பு தராமல் மறுத்ததோடு சில முட்டாள்தனமான காரணத்தை கூறினார். இதனால் வேறு வழியில்லாமல் ரயில் பயணத்தில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது'' என கூறினார்.
இதனை பார்த்த மற்றவர்கள் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். எந்த மாதிரியான வேலை பார்க்கிறீர்கள். எதற்காக இவ்வளவு வேகத்துக்கான இண்டர்நெட் கனெக்சன் வேண்டும்? சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதேவேளையில் இன்னும் சிலரோ எங்கிருந்து பணி செய்தால் என்ன அலுவலகம் சொல்வதை கேட்டு நடக்க தான் வேண்டும். இதனால் எங்கு சென்றாலும் அதற்கு தேவையான இணையதள வசதிகளை ஏற்படுத்தி இருக்கலாமே? என்று அறிவுரை கூறி உள்ளனர்.
இன்னொரு தரப்போ, ‛‛அலுவலக வேலையில் அடிக்கடி மீட்டிங் இருக்கும். இதனை ரயிலில் இருந்து செய்யும்போது மீட்டிங்கிற்கு இடையூறு ஏற்படும். இண்டர்நெட் பிரச்சனையால் பேசுவோரின் குரலும் சரியாக கேட்காது. இதனால் மொத்தமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் ஆப்ஷனையே நீக்கிவிடுவார்கள்'' என்று அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications