காக்கா புடிச்சா ஒண்ணும் நடக்காது.. எம்.எல்.ஏ என்று கூட பார்க்க மாட்டேன்.. ராமதாஸ் பகிரங்க எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எம்எல்ஏ என்றாலும் பார்க்கமாட்டேன், தூக்கி வங்கக்கடலில் வீசி விடுவேன். எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்றால் உழைக்க வேண்டும். காக்கா பிடித்தால் ஒன்றும் நடக்காது." என கட்சி நிர்வாகிகளிடம் காட்டமாகப் பேசியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவின் தொடக்கத்தில் வன்னியர் சங்கக் கொடியை பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். இந்த மாநாட்டில், மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த

Work Hard If You Want to Become an MLA Ramadoss Warns PMK Cadres
மாநாட்டில் பேசிய பாமக தலைவர் ராமதாஸ், "10.5% இட ஒதுக்கீடு வழங்காததால், போராட்டத்தை அறிவிக்கிறோம். இதுவரை நடந்திராத வகையில் அந்தப் போராட்டம் இருக்கும். போராட்டத்திற்காக எவ்வளவு தியாகத்தை செய்யவும் தயாராக இருக்கிறோம். 45 வருடமாக உங்களுக்காகவும், அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடியும், போராடி சில வெற்றியும் பெற்றவன் இந்த ராமதாஸ். சமூகநீதிக்காகவும், இட ஒதுக்கீட்டிற்காகவும் என்னை போன்று இந்தியாவில் யாராவது போராடி இருக்கிறார்களா? ஆனால், நான் இந்த சமுதாயத்தில் பிறந்ததால் வெளியே தெரியவில்லை.

தமிழ்நாடு முழுக்க அனைத்து திசைகளிலும் பயணித்து, 95,000 கிராமத்திற்கும் பயணித்துள்ளேன். என் காலடி படாத கிராமமே தமிழ்நாட்டில் இல்லை. நாமும் ஒரு முறை தமிழ்நாட்டை ஆள வேண்டும் எனும் எண்ணத்தோடு என் பேச்சை ஒரு முறை கேளுங்கள். எனக்கு ஆள வேண்டும் எனும் ஆசை கிடையாது. அப்படி இருந்திருந்தால், நான் இந்தியாவில் ஆளுநராகவும், அமைச்சராகவும் இருந்திருப்பேன். நான் மக்களுக்காக வாழ்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக 10.5% வழங்க சொல்லி முறையிட்டிருக்கிறேன்.

ஒரு தொகுதியில் 2000 இளைஞர்கள், இளம்பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு தொகுதியில் 100 வாக்குகளை கொண்டுவந்தால், அந்தத் தொகுதியில் நம்மால் வெல்ல முடியும். தமிழ்நாட்டில் 50 தொகுதிகளில் நம்மால் எளிதாக வெல்ல முடியும். ஆனால், நிறைய பேர் இங்கு உழைக்காமல், ஏமாற்றிக் கொண்டிருப்பது எனக்கு தெரியும். நான் வலுவாக உள்ளேன். இன்னும் உங்களுக்காக உழைக்க வலுவாக இருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் குடும்பத்தினரின் வாக்கைப் பெற வேண்டும். நாம் ஆட்சியில் அமர்வதற்கு அது போதும்.

தனியாக யானை சின்னத்தில் நின்று நான்கு தொகுதிகளில் அன்று வென்ற வரலாறு நமக்கு இருக்கிறது. இன்று கூட்டணியில் சேர்ந்து ஐந்து தொகுதிகளில் தான் வென்றோம். இதனைக் கண்டு கோபம் வரவில்லையா? காரணம் நம்மாள், நம்மளையே காட்டிக்கொடுக்கிறார்கள். இனி அப்படி இருந்தால், உங்கள் அனைவரின் கணக்கும்; அதாவது உங்கள் பொறுப்புகள் அனைத்தும் பறிக்கப்படும். எம்.எல்.ஏ. என்றும் கூட பார்க்க மாட்டேன், கடலில் தூக்கி வீசுவேன். உங்கள் கணக்குகள் பார்க்கப்படுகிறது. எனவே இனி சும்மா ஏமாற்றிக்கொண்டு இருக்க முடியாது. காக்கா பிடித்தால் ஒன்றும் நடக்காது. உங்களை நம்பி தேர்தலில் இறங்கினால் அவ்வளவு தான். சிலர் எங்கே கூட்டணி, யாருடன் கூட்டணி என்று கேட்கிறார்கள். கூட்டணியை பற்றி முடிவெடுக்க நான் இருக்கிறேன். அதனை நான் முடிவு செய்வேன். உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம்.

வெளி வேஷம், வெளிப் பேச்சு, கூட்டணி குறித்த பேச்சு, கட்சிக்குள்ளே கூட்டணி இனி இதுவெல்லாம் நடக்காது. எனவே உன்னை நீ திருத்திக்கொள். இல்லை என்றால் உன்னால் இந்தக் கட்சியில் பொறுப்பிலேயே இருக்க முடியாது. உங்களின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது. உங்கள் பதவிக்கு இளம் சிங்கங்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீயோ காலை வாரிக்கொண்டிருக்கிறாய். இனி அது நடக்காது. இந்தக் கட்சி தனிப்பட்டவரின் சொத்து அல்ல. எனது ஆசை நாம் ஆள வேண்டும். அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்" எனப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+