சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
சென்னை: சென்னையில் உள்ள இந்திய ரயில்வேயின் ICFன் ஆலையில் இந்தியாவின் சொந்த தயாரிப்பில் புல்லட் ரயில் கட்டப்பட்டு வருகிறது.
250 KMPH-க்கு மேல் வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புல்லட் ரயில்கள் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜப்பானிய ஒத்துழைப்பு ஷிங்கன்சென் E5 ரயில்களை 320 KMPH வேகத்தில் இயக்கும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட உள்ளது. சென்னையில் நேற்று இதன் கட்டுமானம் தொடங்கி உள்ளது.
புல்லட் ரயில்: ஏற்கனவே சென்னை - மைசூர் இடையே இந்தியாவின் இரண்டாவது புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இதற்காக நிலம் எடுப்பதற்காக கருத்து கேட்பு கூட்டங்கள் விரைவில் நடத்தப்பட உள்ளது.
புல்லட் ரயில் அமைக்கப்படும் இடம் எங்கே வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது சென்னை, பெங்களூர் (பெங்களூரு) மற்றும் மைசூர் (மைசூரு) ஆகிய நகரங்களை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள 9 நிலையங்கள் வழியாக இணைக்கும்.
சென்னை - மைசூர் அதிவேக ரயில் (CBM புல்லட் ரயில்) திட்டம் 435 கிமீ தூரம் செல்லும் உத்தேச அதிவேக ரயில் பாதை.இதில் தொடக்க ஸ்டேஷன் சென்ட்ரல் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ராஜா முத்தையா ரோடு - சென்ட்ரல் ரயில் நிலையம் இடையே இந்த புல்லட் ரயில் நிலையம் அமைக்கப்படும்.
இது முழுக்க முழுக்க அண்டர் கிரவுண்ட் முறையில் சென்னையில் அமைக்கப்படும். சென்னைக்கு வெளியே செல்ல செல்ல இது வெளியே வரும். சென்ட்ரல் ஏற்கனவே மெட்ரோ , பேருந்து நிலையம், ரயில் நிலையத்தை கொண்டு இருப்பதால் புல்லட் ரயில் வரும் பட்சத்தில் அந்த பகுதியே மாற்றம் அடையும்,
நிலம் எடுக்கும் பணி: இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் இந்த வருடம் தொடங்க உள்ளது. சென்னை சென்ட்ரல் அருகே, பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், பங்காரப்பேட்டை, பெங்களூரு, சென்னபட்னா, மாண்டியா மற்றும் மைசூரு மார்க்கம் வழியாக இந்த ரயில் பயணிக்கும். இந்த திட்டத்தின் முக்கிய புள்ளிவிவரங்கள் முன்மொழியப்பட்டது: 435 கி.மீ
அதிகபட்ச வேகம்: 350 கி.மீ
செயல்பாட்டு வேகம்: மணிக்கு 320 கி.மீ
சராசரி வேகம்: 250 kmph
ட்ராக் கேஜ்: ஸ்டாண்டர்ட் கேஜ் - 1435 மிமீ
சிக்னலிங்: DS-ATC
ரயில் திறன்: 750 பயணிகள்
இழுவை: 25 KV AC மேல்நிலை கேடனரி (OHE)
பாதுகாப்பு: பூகம்பம் ஏற்பட்டால் தானாக நிறுத்துவதற்கும், நிலநடுக்கம் கண்டறிதல் மற்றும் எச்சரிக்கை அமைப்பு (யுரேடாஸ்) ஆகியவை கொண்டது.
சென்னை - மைசூர் ஹெச்எஸ்ஆர் பாதை
நீளம்: 435 கி.மீ
நிலையங்களின் எண்ணிக்கை: 9
நிலையத்தின் பெயர்கள்: சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், பங்காரப்பேட்டை, பெங்களூரு, சென்னபட்னா, மாண்டியா மற்றும் மைசூரு ஆகியவை ஆகும்.
எக்ஸ்பிரஸ் வே: சென்னை பெங்களூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் வே சாலை பணிகள் நடந்து வருகின்றன. இதே பாதைக்கு அருகே புல்லட் ரயில் கொண்டு வரப்பட உள்ளது.
முதல் திட்டம்: மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதை (MAHSR), அல்லது மும்பை-அகமதாபாத் HSR, மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையையும், குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்தையும் இணைக்கும் அதிவேக ரயில் பாதையாகும். இது இந்தியாவின் முதல் அதிவேக ரயில் பாதையாக இருக்கும்.
தொடக்கத்தில் இதற்கான கட்டுமானம் ஏப்ரல் 2020 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, மற்றும் திட்டம் டிசம்பர் 2023 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மகாராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், முழு நடைபாதையும் முடிவடையும் தேதி இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் குஜராத் வழியாக 352 கிமீ பகுதியில் 50 கிமீ (31 மைல்) பகுதியைத் முதல்கட்டமாக 2026ல் திறக்க உள்ளனர். இந்த திட்டம் 2027 இல் முழுமையாக திறக்கப்படும், சூரத்திலிருந்து பிலிமோரா வரை, ஆகஸ்ட் மாதம் 2026ல் முதல் கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
எங்கே வரும்: எக்ஸ்பிரஸ் வே: சென்னை பெங்களூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் வே சாலை பணிகள் நடந்து வருகின்றன. இதே பாதைக்கு அருகே புல்லட் ரயில் கொண்டு வரப்பட உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications