உலக தண்ணீர் நாள்..தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே..நீரின் அவசியம் பற்றி கூறும் முதல்வர்
தண்ணீர் என்று சொல்லாமல் அமிழ்தம் என்று சொன்னவர் திருவள்ளுவர். மனித உடலில் நீரின் அளவு கூடினாலும் குறைந்தாலும் நோய் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார் வள்ளுவர்.
நம்மைக்காக்கும் உயிர் நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும், தண்ணீரை வீணாக்கக் கூடாது,தண்ணீரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று உலக தண்ணீர் தினத்தை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
உலக தண்ணீர் நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு முக்கியமானது தண்ணீர், இந்த பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம் தண்ணீர். உலகம் எந்த அளவிற்கு உயர்ந்தாலும் மாறினாலும், மாறுதலை அடைந்தாலும் தண்ணீரின் தேவை மாறாது.

அதனால்தான் நீரின்றி அமையாது உலகு என்றார் ஐயன் திருவள்ளுவர். தமிழ் நிலமானது தண்ணீரை தனது பண்பாட்டுடன் சேர்த்து வளர்த்து வந்துள்ளது.
தண்ணீர் என்று சொல்லாமல் அமிழ்தம் என்று சொன்னவர் திருவள்ளுவர். மனித உடலில் நீரின் அளவு கூடினாலும் குறைந்தாலும் நோய் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார் வள்ளுவர்.
திருமந்திரமும், தேவாரமும், திருவாசகமும் தண்ணீரின் அவசியத்தை அழகு தமிழில் கூறியுள்ளது. நீர் நிலைகளின் அளவை குறித்து குளம், குட்டை, ஏரி, நீரோடை, ஆறு, அருவி, கடல் என்று பிரித்து பெயர் வைத்தவர்கள் தமிழர்கள்.

எல்லாமே நீர் உள்ள இடம்தான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டது. நீரின் தன்மைக்கேற்ப பெயர் சூட்டிய இனம் தமிழ் இனம். தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்று சொல்வார்கள்.
நமது உடலின் அனைத்து உறுப்புகளும் சரியாக செயல்படுவதற்கு தண்ணீர் மிக மிக அவசியம். உணவின்றி கூட பல நாட்கள் வாழ்ந்து விடலாம் தண்ணீர் இன்றி வாழ முடியாது. இத்தகைய உயிர் நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும்.
'உயிர் நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும், நம்மை காக்கும் தண்ணீரை வீணாக்கக் கூடாது,தண்ணீரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், தூய்மையாக வைத்திருக்க வேண்டும், மாசுபடாமல் காக்க வேண்டும். நீர் நிலைகளை தூர்வாரி வைத்திருக்க வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் 'உலக தண்ணீர் நாள்' வாழ்த்துச் செய்தி pic.twitter.com/PqVgnqUl3g
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 22, 2023
இன்றைக்கு ஒரு நாட்டின் வளம் என்பது நீர் வளமாக, இயற்கை வளமாக கணக்கிடப்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். புவி வெப்பமயமாதலில் இருந்து காப்பது தண்ணீர்தான்.
நீரில்லையேல் உயிர் இல்லை என்பதை உணர்ந்து தண்ணீரை காப்போம்.. தாய் நிலத்தை காப்போம் என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications