இந்தியாவில் மோசமாகும் நிலை.. அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. இன்றைய நிலவரம் என்ன?
சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்குதலுக்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 53415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 11,229,591 பேர் குணமாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 249 பேர் பலியாகி உள்ளனர்.
அங்கு மொத்தம் 11,787,013 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 160,726 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில்தான் கொரோனா கேஸ்கள் மிக மோசமான நிலை காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 31855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 25,64,881 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 22,62,593 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் இதுவரை 53685 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.அங்கு இரண்டாம் அலைக்கான அச்சம் ஏற்பட்டுள்ளது.

கேரளா
கேரளாவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 11,09,909 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 10,80,803 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 4528 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில்தான் தினமும் அதிக கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு மொத்தம் 9,75,955 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 9,46,589 பேர் குணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 12461 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

தமிழகம்
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,71,440 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 8,49,064 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 12630 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 8,95,121 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,84,978 பேர் குணமடைந்துள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் இதுவரை 7197 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications