• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பிளாஷ் பேக் 2020: எள்ளு வய பூக்கலையே.. டிரம்ப் தோற்ற போது வைரலான மறக்க முடியாத மீம் வீடியோ

|

சென்னை: ஒரு வலியை, ஒரு சந்தோஷத்தை, ஒரு பாதிப்பை, சொல்வதை விட மீம்ஸ் மூலம் பார்க்கும் போது அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.. இப்படி அரசியல், ஜல்லிக்கட்டு, காமெடி என பல நையாண்டிகள் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்றபோது வெளியான எள்ளு வய பூக்கலையே மீம் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது.

  'எள்ளுவய பூக்கலயே' பாடலுடன் முன்னாள் US அதிபர் டிரம்ப்பை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ் - வீடியோ

  அமெரிக்காவின் 45வது அதிபராக குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப் கடந்த 2016ல் பதவியேற்றார். தீவிர வலதுசாரி ஆதவாளரான டிரம்பின் வெற்றியை மண்ணின் மைந்தர் கொள்கை கொண்ட பலர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

  அதேநேரம் இடதுசாரி கொள்கை உள்ளவர்கள். திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஹிலாரி கிளிண்டன் தோற்றதை எண்ணி அப்போது பலர் குமுறினர். தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக புகார் எழுந்தது.

  சபரிமலை விவகாரம்.. மீண்டும் கையில் எடுத்த காங்கிரஸ் கூட்டணி.. பினராயிக்கு சிக்கல்

  டிரம்ப் கொள்கை

  டிரம்ப் கொள்கை

  டொனால்ட் டிரம்ப் அதிபராக கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதாவது வெளிநாட்டில் குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்து அதை அமெரிக்காவில் விற்கும் சீனா உள்ளிட்ட பல நாடுகளின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டார். சுருக்கமாக சொல்வது என்றால் அமெரிக்க வேலை அமெரிக்கனுக்கே என்று தீவிரமாக இருந்தார்.

  கனவு கலைந்தது

  கனவு கலைந்தது

  டிரம்ப் மீண்டும் அதிபராக வந்துவிடுவோம் என்று தீவிரமாக நம்பி கொண்டிருந்தார். ஆனால் கொரோனா தொற்று அவர் மீண்டும் அதிபராகும் கனவில் மண்ணை மட்டுமல்ல, பெட்ரோலையும் ஊற்றி எரித்துவிட்டது. ஆம் 290க்கும அதிகமான எலக்ட்ரோல் வாக்குகளை பெற்று பிடன் அதிபர் தேர்தலில் மெஜாரிட்டியை பெற்றுவிட்டார். பல மாநிலங்கள் வெற்றி சான்றிதழை டிரம்புக்கு கொடுத்துவிட்டன.

  ஜனவரி 20ல் பதவியேற்பு

  ஜனவரி 20ல் பதவியேற்பு

  டிரம்ப் தனது தோல்வியை ஏற்காமல் போட்ட வழக்குகளை பலவற்றை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துவிட்டன. இன்னும் சில நாளில் டிரம்ப் தோற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது பிடன் எத்தனை எலக்ட்ரோல் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அமெரிக்க அதிபராகிறார் என்பதையும் அறிவிக்க போகிறது.

  வரும் ஜனவரி 20ம் தேதி பிடன் அமெரிக்காவின் 46வது அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

  டிரம்ப் வீடியோ

  டிரம்ப் வீடியோ

  டிரம்ப் இனி அதிபர் இல்லை என்று முடிவுக்கு வந்த நம்மூர் மீம் கிரியேட்டர்கள் டிரம்ப் தேர்தலில் தோற்ற அன்று போட்ட மீம் வீடியோக்கள், புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகின. அதில் மறக்க முடியாத அளவுக்கு வைரலானது எள்ளு வய பூக்கலையோ என்ற பாடலில் ஓடிய டிரம்பின் வீடியோதான்- .

   
   
   
  English summary
  ellu vaya pookalaye video: Spread the Trump memes video on social media. tamil movie asuran song elleuvay pookalaye play on Go GO TRUMP video. trump loss in us president election. thats why memes released on november
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X