ஆர்டர் போட்ட முதல்வர்.. உன்னிப்பாக கவனிக்கும் டிஜிபி.. மாரிதாஸ் முதல் கிஷோர் சாமி வரை.. பரபர கைதுகள்
சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே சமூக வலைத்தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்புபவர்கள், மோசடிகளை செய்பவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாகவே தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் பொய்யான கருத்துக்களை தெரிவிக்கும் நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அரசுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் எதிராக அநாகரீகமாவும், அவதூறாகவும் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சார்பாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு டிஜிபி வெளியிட்ட அறிக்கையில் , சிலர் சுய விளம்பரத்திற்காக ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளை பதிவு செய்து, சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை தூண்டி வருகின்றனர். அதிலும் குறிப்பிட்ட சிலர், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சொந்த ஆதாயத்திற்காகவும், மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து மலிவான, தரம் தாழ்ந்த கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.

எச்சரிக்கை
காவல் துறையைப் பொறுத்தவரை, சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கட்சி, சாதி, மதம் சார்ந்த இரு தரப்பினருக்கிடையே மோதல்களைத் தூண்டும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்தால் அதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே டிஜிபி சார்பாக எச்சரிக்கை அறிக்கையும் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசு சமூக வலைதள அவதூறுகளுக்கு எதிராக எவ்வளவு கண்டிப்புடன் இருக்கிறது என்பது இந்த அறிக்கையில் இருந்தே உறுதியாகிறது. முதல்வர் இதில் கண்டிப்புடன் இருக்கும் நிலையில்தான் கடந்த 4 மாதத்தில் பல முக்கியமான சர்ச்சைக்குரிய யூ டியூப் பிரமுகர்கள் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பப்ஜி மதன்
சிறுமிகளிடம் யூ டியூப் சேனலில் ஆபாசமாக பேசியதாகவும், பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் பப்ஜி கேமர் மதன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் போலீசார் மூலம் இந்த வருடம்தான் கைது செய்யப்பட்டார். யூ டியூபில் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளின் ட்ரிக்குகளை சொல்லி தருவதாக சேனல் நடத்தி வந்த யூ டியூப் கேமர் மதன் பெண்களிடம், சிறுமிகளிடம் தவறாக பேசியதாகவும், பண மோசடி செய்ததாகவும் புகார். பெண்களிடம் தவறாக பேசுதல், வீடியோ எடுத்து மிரட்டுதல், பண மோசடி, இளம் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, டெலிகிராமில் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்வது என்று பல்வேறு புகார்கள் கேமர் மதன் மீது வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் கைதானவர் தற்போது சிறையில் இருக்கிறார்.

சாட்டை துரைமுருகன்
அதேபோல் போலீசார் மூலம் கைது செய்யப்பட்ட இன்னொரு யூ டியூப் பிரபலம்தான் சாட்டை துரைமுருகன்.திருச்சியில் வினோத் என்ற கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக சாட்டை துரைமுருகன் உட்பட சிலர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சாட்டை துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் பிணையில் வெளியே வந்த சாட்டை துரைமுருகன் முதல்வர் ஸ்டாலினை கன்னியாகுமரி கூட்டத்தில் இழிவாக பேசியதாகவும், வன்முறையை தூண்டியதாகவும் மீண்டும் கைது செய்யப்பட்டார். இவர் மீது இன்னும் பல வழக்குகள் போலீஸ் நிலையத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கிஷோர் கே சாமி
இன்னொரு யூ டியூபரான கிஷோர் கே சாமியும் இதே போன்ற காரணத்திற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார். இவரும் தொடர்ந்து திமுக தலைவர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள், சில சினிமா துறையினர், பெண் பத்திரிகையாளர்கள் என்று பலரை தவறாக பேசி வந்தார்.இவருக்கு எதிராக பெண் பத்திரிகையாளர்கள் பலர், பல முறை புகார் அளித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து இவர் நடவடிக்கைக்கு அஞ்சாமல் யூ டியூபில் வீடியோ போட்டு வந்தார். இந்த நிலையில்தான் கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமி தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நாகை மீனவன்
இதில் அரசியல் சார்பற்ற இன்னொரு யூ டியூபரான நாகை மீனவனும் கைது நடவடிக்கைக்கு உள்ளானார். சுங்கத்துறை நடத்திய சோதனை ஒன்றில் யூ டியூப் பக்கமான நாகை மீனவன் பக்கத்தை நடத்தி வந்த குணசீலன் கஞ்சா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் படகில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவரின் வீடியோ பக்கம் மிகவும் பிரபலம். இவரின் பக்கத்திற்கு 687000 சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவர் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும் பல ஆயிரம் வியூஸ்களை அள்ள கூடியது. இந்த நிலையில்தான் கஞ்சா கடத்தியதாக தற்போது இவர் கைதாகி உள்ளார்.

மாரிதாஸ்
இதில் கடைசியாக கைதான யூ டியூபர்தான் மாரிதாஸ். மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ், "Maridhas Answers" என்ற பெயரில் இயங்கும் யூடியூப் சேனலில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். தீவிர வலதுசாரி ஆதரவாளராக கருதப்படும் இவர் திமுகவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். திமுகவிற்கு எதிராக தொடர்ந்து இவர் அவதூறு கருத்துக்களை குறிப்பிட்டு வந்தார்.
Recommended Video

நடவடிக்கை உஷார்
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக கூறி யூ டியூபர் மாரிதாஸ் இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை வெளியிடுபவர்கள் மீதும், அவதூறு பரப்புபவர்கள் மீதும் அரசு கண்டிப்பு காட்டுகிறது என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. மேலே லிஸ்டில் இருக்கும் கைதுகள் அனைத்தும் இந்த வருடத்தில் செய்திகளில் அதிகம் இடம்பிடித்த கைது நடவடிக்கைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications