Year Ender 2021: தமிழக சட்டசபை தேர்தலில் கடைசி நேர ட்விஸ்ட்.. தோல்வியிலும் மாஸாக சாதனை புரிந்த கமல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் கடும் இழுபறிக்கு பிறகு கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார். மிக சொற்ப அளவிலான வாக்குகளில் கமல்ஹாசன் தோல்வியை தழுவினார்.

கமல்ஹாசன் மட்டும் வென்றிருந்தால் மக்கள் நீதி மய்யம் கட்சி முதல்முறையாக சட்டசபைக்குள் நுழைந்தது என்ற பெருமையை பெற்றிருக்கும். கமல்ஹாசன் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

இதையடுத்து 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி தனித்து போட்டியிட்டது. இதில் தோல்வி அடைந்தாலும் அக்கட்சியின் வாக்கு சதவீதம் மற்ற கட்சியினரை அதிர வைத்தது.

தேர்தலில் போட்டி

தேர்தலில் போட்டி

குறுகிய காலத்திலேயே தேர்தலில் போட்டியிட்டு லட்சக்கணக்கான வாக்குகளை எடுத்தனர். இதையடுத்து அதே நம்பிக்கையுடன் சட்டசபைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. இந்த முறை சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்கப்பட்டது.

பாரிவேந்தரின் கட்சி

பாரிவேந்தரின் கட்சி

எனினும் சரத்குமாரின் கட்சியும் பாரிவேந்தரின் கட்சியும் கணிசமான வாக்குகளை பெறவில்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் வாக்கு எண்ணிக்கையின் போது காலையிலிருந்து முன்னிலையில் இருந்தவர் கமல்ஹாசன். அதன் பின்னர் மதியத்திற்கு மேல் வானதி ஸ்ரீனிவாசன் முன்னிலை பெற தொடங்கினார்.

லீடிங்கில் கமல்

லீடிங்கில் கமல்

இதையடுத்து கமல்ஹாசன் லீடிங்கில் வந்தார். நட்சத்திர அந்தஸ்து கொண்ட இந்த தொகுதியில் கமல்- வானதி ஸ்ரீனிவாசன் இடையே கடும் மோதல் நீடித்தது. வானதியா கமலா என்ற அளவுக்கு சென்றது. ஆனால் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸின் மயூரா ஜெயக்குமார் ரேஸில் இல்லாமல் இருந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோற்ற நிலையில் கமல்ஹாசன் எப்படியும் வென்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கடைசி நேரத்தில் டிவிஸ்ட்டாக 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி ஸ்ரீனிவாசன் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு கமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இதில் ஆறுதல் பெறக் கூடிய விஷயங்கள் என்னவெனில் கமல்ஹாசன் சாதாரணமாக தோற்றுவிடவில்லை. கடுமையான டஃப் கொடுத்தே தோற்றுள்ளார். மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதே தொகுதியில் இரண்டாவது இடத்தை பிடித்த மயூரா ஜெயக்குமார் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அதை உடைத்து அவரை 3ஆவது இடத்திற்கு தள்ளிய பெருமை கமல்ஹாசனையே சாரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+