கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல.. தொடர் சர்ச்சைகளில் சிக்கித் தவித்த அமைச்சர்கள்.. பிளாஷ் பேக் 2023
சென்னை: 2023ஆம் ஆண்டு முழுவதும் திமுக அமைச்சர்கள் ஏராளமானோர் தொடர் சர்ச்சைகளில் சிக்கினர். சர்ச்சைகளில் சிக்காமல் தப்பியதே சிலர் மட்டும்தான். "சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு" என்பது போல இந்த ஆண்டு "சர்ச்சையில் சிக்காத அமைச்சர் எங்க இருக்காரு" என்று கேட்கும் அளவுக்கு இருந்தது. அவற்றில் சிலவற்றை அசைபோடுவோம்..
அமைச்சர் பிடிஆர்: நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோக்கள் வெளியாகி திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்து விட்டனர். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர் என்று நிதி அமைச்சர் பிடிஆர் கூறுவதைப் போல ஒரு ஆடியோ பரவியது.

அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அந்த ஆடியோவை பகிர்ந்து கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்தன. 30 ஆயிரம் கோடி மேட்டர் ட்ரெண்ட் ஆன நிலையில், அந்த ஆடியோ போலியாக தயாரிக்கப்பட்டது என விளக்கம் அளித்தார் பிடிஆர். ஆனால், சில வாரங்களில் நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்தே பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டு, தகவல் தொழில்நுட்ப இலாகா அவருக்கு வழங்கப்பட்டது.

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு: சென்னையில் தமுஎகச நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு அதனை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்றிருந்தார்.

சனாதன தர்மம் தொடர்பான தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு நாடு முழுவதும் எதிரொலித்தது. பாஜகவினர் தொடங்கி, பிரதமர் மோடி வரை இந்த விவகாரம் குறித்துப் பேசினர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூபாய் 10 கோடி விலை வைத்தார் உ.பி மாநிலம் அயோத்தி சாமியார் ஒருவர். அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை கேபினட்டில் இருந்தே தூக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து, அது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வருகிறது.
அமைச்சர் துரைமுருகன்: கடந்த மே மாதம் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மூத்த அமைச்சர் துரைமுருகன், "பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் கொடுக்கப் போகிறோம். நீங்களே செலவுக்கு வாங்கிக்கொள்ளலாம். கணவன் சம்பாதித்த பணத்தை அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு வந்திடலாம். மனைவி கையில் அரசு கொடுக்கும் உரிமைத்தொகை பணம் உள்ளது. குடும்பத்தை காப்பாற்றுவதற்கு இந்த தொகை உதவும்.

உங்கள் பெண் கல்லூரியில் படிக்கிறார் என்றால், அவர்களுக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கையில் கொடுக்கிறோம். உங்க அம்மாவிடம் போய் பஸ்சுக்கு கேட்காதே.. நீ பசங்களோட சினிமாவுக்கு போனால் அங்க பணம் கேட்காதே.. ஒரு செல்போன் வாங்கி வைத்துக்கொள்.. நைசாக பேசு, என்ன வேணும்னாலும் பண்ணு, அதுக்கும் ஒரு ஆயிரம் கொடுக்கிறோம்" என்று அமைச்சர் துரைமுருகன் பேசியது மக்களை முகம் சுளிக்க வைத்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி: திமுக அமைச்சர்களிலேயே இந்த ஆண்டு மிக மோசமானதாக அமைந்துவிட்டது என்று சொன்னால் அது செந்தில் பாலாஜிக்குத்தான். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

கைது செய்யப்பட்டபோதே நெஞ்சு வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பைபாஸ் சர்ஜரியும் செய்யப்பட்டது. சுமார் ஆறு மாதங்களாக சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் பெற அவரது தரப்பினர் எவ்வளவோ முயன்றும் ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. வெற்றி நடை போட்டு வந்த செந்தில் பாலாஜி, இந்த ஆண்டில் பாதியை ஜெயிலில் கழிக்கும்படி ஆகிவிட்டது.
அமைச்சர் எ.வ.வேலு: அமைச்சர் எ.வ.வேலு, நீதிமன்றம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார். "தென்மாவட்ட மக்கள் வழக்கு நடத்துவதற்கு அதிக பணம் செலவு செய்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரவேண்டிய தேவை இருந்தது. மத்திய அரசிடம் போராடி மதுரைக்கு உயர்நீதிமன்ற கிளையை கொண்டு வந்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட பிச்சை" என எவ வேலு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் பொங்கி எழுந்தன.
இதையடுத்து, இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தியதை செய்தியில் பார்த்த பிறகுதான் தெரியவந்தது. அதன் பிறகு எனக்கு மன உளைச்சலே ஏற்பட்டு விட்டது. பொதுக்கூட்டத்தில் பேசிய அந்த வார்த்தையை திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஐகோர்ட் கிளை அமைந்தது கருணாநிதி அளித்த கொடை என்று சொல்வதற்கு பதிலாக உணர்ச்சிவசப்பட்டு தவறான வார்த்தையை பயன்படுத்தி விட்டேன் என ஜகா வாங்கினார்.
அமைச்சர் பொன்முடி: அமைச்சர் பொன்முடி கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒரு பெண் நிறைய குறைகள் இருப்பதாகக் கூறினார். அதனால் எரிச்சலடைந்த அமைச்சர் பொன்முடி, "என்னது குறையா.? கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இரு" என்று கோபப்பட்டார். பிறகு, "உன் வீட்டுக்காரர் வந்திருக்காரா?" என்று பொன்முடி கேட்டார். அதற்கு, "அவர் போயிட்டார்" என்று அந்தப் பெண் பதில் சொல்ல... "போயிட்டாரா? பாவம்... நல்லவேளை" என்று சிரித்தார் பொன்முடி. அமைச்சர் பொன்முடியின் இந்தச் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விசிக பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச் செல்வன் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பான புகைப்படத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அமர்ந்து இருப்பது போலவும், சிந்தனைச் செல்வன் நின்றுகொண்டு பதில் சொல்வது போலவும் இருந்தது. இதையடுத்து, சமூக வலைதளங்களில், திமுக அமைச்சர், சாதி ரீதியாக எம்.எல்.ஏவை அவமதிப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் எனக்குச் செய்த உதவிகளை உயிர் உள்ளவரை மறக்கமாட்டேன். அதேசமயம், பொங்கும் நன்றி உணர்வை வெளிப்படுத்த அமைச்சர் என்னை ஒருபோதும் அனுமதித்ததில்லை. எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தை சந்தித்து விடைபெற்ற நிகழ்வின் ஒரு பகுதியை மட்டும் பதிவு செய்து அவதூறாக பதிவிட்டு இருக்கிறார்கள் என சிந்தனைச் செல்வன் விளக்கம் அளித்தார்.

ஆவடி நாசர்: திருவள்ளூரில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்விற்கான ஏற்பாடுகளை பார்வையிடச் சென்ற அமைச்சர் நாசர், நாற்காலி கேட்ட நிலையில், நாற்காலிகளை எடுத்துப் போட தாமதம் ஆனது. பின்னர், ஒருவர் ஒரே ஒரு சேரை மட்டும் கொண்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நாசர், கீழே கிடந்த கற்களை தொண்டர்களை நோக்கி வீசி எறிந்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications