Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவிலிருந்து விலகிய கவுதமி.. சூடுபிடித்த நில மோசடி கேஸ்! மர்ம அறைகள் 11! பரபரத்த 2023!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக நிர்வாகியால் கோடிக்கணக்கில் ஏமாற்றப்பட்டதாக நடிகை கவுதமியி ன் புகாரை தொடர்ந்து காவல் துறையினர் அந்த நிர்வாகி வீட்டில் சோதனை நடத்தி 11 அறைகளுக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்தார் நடிகை கவுதமி. இவர் கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி பாஜகவிலிருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவித்திருந்தார். மேலும் தனக்கு சொந்தமான ஸ்ரீபெரும்புதூர், ராமநாதபுரத்தில் உள்ள ரூ 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜக நிர்வாகி அழகப்பன் கூறியதை கேட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பலராமன் உள்பட இருவருக்கு பொது அதிகாரம் எழுதி கொடுத்தாராம்.

Year Ender 2023: Gautami quit from BJP and give land scam complaint

ஆனால் 25 கோடி மதிப்பிலான இடத்தை பிரச்சினை இருப்பதாக கூறி வெறும் 4 கோடிக்கு அந்த இருவரும் விற்றதாக தெரிவித்தனர். மேலும் அந்த 4 கோடி ரூபாயை கூட இரு தவணைகளாகவே செலுத்தினார்களாம். இந்த நிலையில் கவுதமிக்கு வருமான வரித் துறை சார்பில் வரி செலுத்தவில்லை என நோட்டீஸ் வந்துள்ளது.

ஆனால் கவுதமியோ தான் விற்ற இடத்திற்கு கிடைத்த ரூ 4 கோடியில் குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக செலுத்திய பிறகும் அவர் இன்னும் வரி செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்ததாம். இதனால் அதிர்ச்சி அடைந்த கவுதமி, நேராக ஸ்ரீபெரும்புதூர் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்று தான் விற்ற சொத்துகளின் விவரங்களை கேட்டறிந்தார். அப்போதுதான் அந்த இருவரும் ரூ 11 கோடிக்கு சொத்துகளை விற்றுவிட்டு அதில் வெறும் 4 கோடியை மட்டும் கவுதமிக்கு கொடுத்தது தெரியவந்தது.

இந்த பணத்தில் அழகப்பனுக்கு பங்கு போனதாக தெரிகிறது. இதையடுத்துதான் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள், அழகப்பனின் மேனேஜர் ஆகியோர் மீது புகார் அளித்திருந்தார். இந்த நிலையில்தான் கவுதமி பாஜகவிலிருந்து விலகினார். அதன்பிறகு அழகப்பன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தலைமறைவாக உள்ள அழகப்பன் உள்ளிட்டோரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் காரைக்குடி கோட்டையூரில், சிவகங்கை, மதுரை ஆகிய இடங்களில் அழகப்பனுக்கு சொந்தமான வீடு, அலுவலகத்தில் அக்டோபர் 31 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் 9.30 மணி நேரமாக இந்த சோதனை நடந்தது. சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து 11 அறைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த 11 அறைகளில் என்ன இருக்கிறது என தெரியவில்லை. இந்த வகையில் பலராமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கவுதமியின் புகாருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அழகப்பனுக்கு 6 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை அவர் ஆஜராகவில்லை. இதனால் அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக விமான நிலையங்களில் அழகப்பனுக்கும் மனைவி நாச்சியம்மாளுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

அழகப்பன் என்பவர் தன்னிடம் சொத்துகளை ஏமாற்றியதாக பாஜகவில் மூத்த நிர்வாகிகளிடம் கவுதமி சொன்ன போது அவர்கள் அழகப்பனுக்கே ஆதரவு தந்ததால் கனத்த இதயத்துடன் பாஜகவிலிருந்து விலகுகிறேன் என அறிவித்து விலகினார். அது போல் ராஜபாளையத்தில் மக்கள் பணிகளை செய்த போது அங்கு போட்டியிடும் வாய்ப்பு கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த உறுதி காப்பாற்றப்படவில்லை என்றும் கவுதமி தனது விலகல் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+