Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறக்க முடியாத 2024! ஆம்ஸ்ட்ராங், ஜெயக்குமார்.. தமிழகத்தில் புயலை கிளப்பிய அரசியல் படுகொலைகள் ரீவைண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 நிறைவடைந்து 2025 வரவேற்க நாமும், நம்மை வரவேற்க 2025ம் தயாராகி வருகிறது. பல மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் இருந்தாலும், சில தூக்க நிகழ்வுகளும் 2024ஆம் ஆண்டி நிகழ்ந்தது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் தமிழகத்தை உலுக்கிய அரசியல் படுகொலைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்..

தமிழகம் கடந்த ஆண்டுகளில் பல அரசியல் படுகொலை சம்பவங்களை பார்த்திருக்கிறது. ஆலடி அருணா, திருச்சி ராமஜெயம், த. கிருட்டிணன் உள்ளிட்ட பல அரசியல் கொலை சம்பவங்கள் தமிழகத்தை மிகுந்த பரபரப்பில் வைத்திருந்தன.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டிலும் பல படுகொலை சம்பவங்கள், தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டன. அவற்றில் சில கொலை சம்பவங்கள் இந்திய அளவிலும் பேசு பொருளாகின. அந்த வகையில் பகுஜன் ஆம்ஸ்ட்ராங் கொலை, நெல்லை காங்கிரஸ் ஜெயக்குமார் தனசிங் கொலை சம்பவம் உள்ளிட்ட சில படுகொலை சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்..

year ender 2024 politics chennai

பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங்:

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் பிரபல ரவுடியான திருவேங்கடம், திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரன், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை, கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், விஜயகுமார், முகுந்தன், விக்னேஷ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

year ender 2024 politics chennai

நெல்லை தீபக் ராஜா:

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா. இவர் கடந்த மே மாதம் தஅப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் ஹோட்டல் வாசலில் வைத்து தீபக் ராஜாவை, அவரது காதலி கண் முன்பே கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த தீபக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது கண்முன்னே காதலனை வெட்டி கொலை செய்ததைக் கண்டு தீபக் ராஜாவின் காதலி கதறி அழுதார். முதல்கட்ட விசாரணையில் தீபக் ராஜா மீது ஏற்கனவே கொலை உள்பட சில வழக்குகள் நிலவில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜாதி ரீதியாக நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

year ender 2024 politics chennai

நெல்லை ஜெயக்குமார்:

கடந்த மே 2ஆம் தேதி தனது தந்தையை காணவில்லை என நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மகன்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் மே நான்காம் தேதி அவரது சொந்த ஊரில் அவரது தோட்டத்தில் வீட்டிற்கு பின்புறம் பாதி உடல் எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார். தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் உலாவின. குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களை குற்றம் சாட்டி ஜெயக்குமார் கடிதம் எழுதியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை அவரது மரணத்தில் எவ்வித துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

year ender 2024 politics chennai

சேலம் சண்முகம்:

சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான சண்முகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக கருதப்பட்ட அவரது உடல் கடந்த நான்காம் தேதி உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போலீசார் திமுக பிரமுகர் சதீஷ் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்தனர். கஞ்சா விற்பனையில் திமுக பிரமுகர் சதீஷ் ஈடுபட்டதாகவும் அது தொடர்பாக சண்முகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் கூலிப்படை மூலம் சதீஷ் அவரை கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+