Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நினைவுகள் 2024: ஆன்லைனை கலக்கிய டாப் -10 சைவ உணவுகள்! தமிழ்நாட்ட யாராலயும் அசைச்சுக்கவே முடியாது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 முடிவடைந்து 2025 புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் அதிக அளவில் ஆன்லைனில் 10 வகை சைவ உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் தமிழகத்தின் முக்கிய மூன்று உணவு பொருட்களும் டாப் 10 பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றன. முதலிடத்தில் இருக்கும் உணவை கேட்டால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்.. அப்படி எந்த வகையான சைவ உணவுகள் இந்தியாவில் அதிக அளவில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டன என்பது குறித்து பார்க்கலாம்..

உலக அளவில் பல்வேறு வகையான மாற்றங்களை ஏற்படுத்தி விட்டு 2024ஆம் ஆண்டு விடை பெற இருக்கிறது. 2025 புத்தாண்டை வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர்.

year ender 2024 foods chennai

2024ஆம் ஆண்டின் முக்கிய நினைவுகளை அசைபோடும் வகையில், 'ஒன் இந்தியா தமிழில்' 2024 இல் தனித்துவமான பல விஷயங்கள் குறித்து பார்த்து வருகிறோம். Year Ender 2024 என்ற பெயரிலான தொடரில், இந்த செய்தி தொகுப்பில் உணவுப் பிரியர்களுக்கான தகவல் இடம் பெறுகிறது.

2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட சைவ உணவுகளின் டாப் 10 பட்டியலை பார்க்கலாம் அதில் தமிழகத்தின் பிரதான உணவு வகைகளும் 3 இடம் பெற்று இருக்கின்றன. முதலிடத்தில் இருப்பது இந்தியா முழுவதும் மிகப் பிரபலமான உணவு வகையான மசாலா தோசை. அதற்கு அடுத்த இடங்களில், பன்னீர் பட்டர் மசாலா, தால் கிச்டி, பன்னீர் பிரியாணி, மாரகெரட்டா பீட்சா, பாவ் பாஜி, இட்லி, வடை, பொங்கல், சமோசா ஆகியவை இடம் பெற்றுள்ளன.

மசாலா தோசை: உலகம் முழுவதும் மசாலா தோசை இந்தியாவில் இருந்து பரவி இருக்கிறது. இந்தியா முழுவதும் மசாலா தோசை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மைசூர் மசால் தோசை என்று தனி சிறப்பு இருக்கிறது. மொறுமொறு தோசையில் நெய்யை தூக்கலாக ஊற்றி உருளைக்கிழங்கு மசாலா தடவி அதில் சில பல காய்கறிகளை தூவி எடுக்கும் மசாலா தோசை நாக்கில் எச்சில் ஊறவைக்கும். ஆன்லைனில் அதைத்தான் அதிகம் தேடி தேடி வாங்கி சுவைத்திருக்கின்றனர் இந்தியர்கள்.

பன்னீர் பட்டர் மசாலா: பால் பொருளான பன்னீர் இந்திய அளவில் சைவ உணவு விரும்பிகளால் அதிகம் நுகரப்படுகிறது. குறிப்பாக தக்காளி, வெண்ணை, முந்திரி சாஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் க்ரீமி வகை உணவான பன்னீர் பட்டர் மசாலா, பரோட்டா, சப்பாத்தி, நான், சாதம் என அனைத்து வகையான உணவுப் பொருட்களுக்கும் சைடிஸ் ஆக பயன்படுத்தப்படுகிறது.

டால் கிச்சடி: பருப்பினால் செய்யப்படும் டால் கிச்சடி சுவையானது மட்டுமல்லாது ஆரோக்கியமான உணவாகவும் பார்க்கப்படுகிறது. காலை, மாலை, இரவு, சாதம், இட்லி, தோசை சப்பாத்தி என எதற்கு வேண்டுமானாலும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

பன்னீர் பிரியாணி: பொதுவாக சைவ உணவு விரும்பிகள் மட்டன், சிக்கன், உள்ளிட்டவற்றுக்கு பதிலாக பன்னீர் அதிகம் விரும்புகின்றனர். பன்னீர் டிக்கா, பன்னீர் மசாலா வகையில், பன்னீர் பிரியாணியும் சைவ உணவு பிரியர்களால் அதிகம் விரும்பப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஸ்விக்கியில் அதிக அளவு ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது பன்னீர் பிரியாணி.

மார்கெரிட்டா பீட்சா : ஐந்தாவது இடத்தில் மார்கெரிட்டா பீட்சா இருக்கிறது. இத்தாலி இதன் பூர்வீகம் என்றாலும், இந்திய பாரம்பரியம் இல்லை என்றாலும் இந்தியர்களில் சைவ உணவு விரும்பிகள் அதிகளவு மார்கெரிட்டா பீட்சாவை ஆர்டர் செய்திருக்கின்றனர்.

என்ன எல்லாமே வட இந்திய உணவுப் பொருட்களாக இருக்கிறது. தென் இந்திய உணவு வகைகள் ஆர்டர் செய்யப்படவில்லையா என்ற சந்தேகம் இருக்கலாம். அந்த வகையில் இந்தியாவில் அதிக அளவு ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் ஏழாவது இடத்தில் லைட்டான அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவான இட்லி இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் மெதுவடை, அதற்கு அடுத்து இடத்தில் பொங்கல் ஆகியவை இருக்கிறது. இந்த மூன்றுமே தமிழகத்தின் பிரதான உணவுப் பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி அதாவது டாப் 10 பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது சமோசா. இதனை இந்தியாவில் உள்ள அனைத்து பகுதி மக்களும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+