சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூப்பர் புயல் அம்பனை தொடர்ந்து 2020-ல் 3 புயலாக தாக்க வரும் நிவர்

Google Oneindia Tamil News

சென்னை: வங்க கடலில் உருவான சூப்பர் புயல் அம்பனை தொடர்ந்து இந்த ஆண்டின் 3-வது புயலாக தாக்க வருகிறது நிவர்.

வங்க கடலில் இந்த ஆண்டில் மே மாதம் உருவானது ஆம்பன் புயல். 1999-ம் ஆண்டு ஒடிஷா புயலுக்குப் பின்னர் வங்க கடலில் உருவான மிகவும் சக்திவாய்ந்த புயலாக ஆம்பன் கணிக்கப்பட்டது.

 நாங்க ரெடி.. நிவர் புயலை எதிர்கொள்ள சிதம்பரம், கடலூர் விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை நாங்க ரெடி.. நிவர் புயலை எதிர்கொள்ள சிதம்பரம், கடலூர் விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை

ஆம்பன் புயல்

ஆம்பன் புயல்

ஆம்பன் புயலாது மே 20-ந் தேதியன்று பிற்பகல் மேற்கு வங்க கடற்பரப்பில் சுந்தரவனக்காடுகளினூடே கரையை கடந்தது. ஆம்பன் கரையை கடந்த போது அதிகபட்சமாக மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

மே.வங்கத்தில் சேதம்

மே.வங்கத்தில் சேதம்

ஆம்பன் புயலால் தமிழகம், புதுவையிலும் கனமழை கொட்டி தீர்த்தது. மேற்கு வங்கத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது ஆம்பன் புயல். ஆம்பனைத் தொடர்ந்து சக்திவாய்ந்த நிசர்கா புயல் உருவானது.

நிசர்கா புயல்

நிசர்கா புயல்

நிசர்கா புயல் அரபிக் கடலில் உருவானது. மகாராஷ்டிராவின் அலிபாக் பகுதியில் ஜூன் 3-ந் தேதியன்று நிசர்கா புயல் கரையை கடந்தது. இதனால் மகாராஷ்டிராவில் கனமழை கொட்டி தீர்த்தது. மகாராஷ்டிராவில் பெரும் சேதத்தை உருவாக்கியது நிசர்கா புயல்.

நிவர், கதி புயல்கள்

நிவர், கதி புயல்கள்

தற்போது வங்கக் கடலில் நிவர் புயலும் அரபிக் கடலில் கதி புயலும் என இரட்டை புயல்கள் உருவாகி உள்ளன. இதில் நிவர் புயல்தான் சென்னை- மகாபலிபுரம் அருகே கரையை கடக்கிறது. கதி புயல் சோமாலியாவை நோக்கி நகர்ந்துள்ளது.

English summary
2020 Year’s Fourth Cyclone Nivar in Bay of Bengal will hit Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X