வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் வீசும் வெப்ப அலைக்கு இந்திய வானிலை மையம் Hot and Humidity weather என்று பெயர் சூட்டி உள்ளது.
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகவே அந்த 14 மாவடங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பெயர் சூட்டிய வானிலை மையம்:
இதற்கான அறிவிப்பை இந்திய வானிலை மையத்தின் தலைவர் மொஹபத்ரா வெளியிட்டுள்ளார். இதற்கு Hot and Humidity weather என்றும் பெயர் வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்பு எல்லாம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்தாலே அது மிகப்பெரியதாகப் பார்க்கப்படும்.
இதேபோல் மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மேற்கு வங்கத்திற்குத்தான் ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திற்கும் இந்தளவுக்கு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ஒடிசா மாநிலத்திற்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக மஞ்சள் அலட்ர் என்றால் கவனம் தேவை என்று சொல்வார்கள். அதே ஆரஞ்சு என்றால் கட்டாயம் அது எச்சரிக்கை. ரெட் என்றால் அதிகப்படியான எச்சரிக்கை. சுருக்கமான சொன்னால் ஆபத்து அதிகம்.

அதே பச்சை அலர்ட் என்றால் எந்த பாதிப்பும் இல்லை. பசுமையாக உள்ளது என்றே பொருள். அப்படிப் பல மாநிலங்களுக்குப் பச்சை அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்:
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், அரியலூர், கரூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்கள் மஞ்சள் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வழங்கப்பட்டிருந்தது. 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் ஒப்பிடும் போது இன்னும் கோடை வெயில் காலம் உச்சநிலையை அடையவே இல்லை. அதற்கு இந்த மாதிரியான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை என்பது 5 நாள்கள் வரை நீடிக்கும் என்றும் குறிப்பாக மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசா, பீகார், கடலோர ஆந்திரப் பிரதேசம், ஏனாம், கர்நாடகா மற்றும் ராயலசீமா ஆகிய பகுதிகளுக்கு ஏப்ரல் 28ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளர்ப்பு பிரயாணிகள் ஜாக்கிரதை:
இதைப்போன்று தமிழ்நாடு, ஜார்க்கண்ட், தெலுங்கானா, கர்நாடகா கடலோர பகுதிகள், உத்தரப்பிரதேசம் மற்றும் கொங்கன் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை வெப்ப அலைக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
இப்படி வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதாகப் பொதுமக்கள் யாரும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் வெளியே செல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.
கூடவே மனிதர்கள் எந்தளவுக்கு எச்சரிக்கையாக இருக்கிறார்களே அதே அளவுக்கு வளர்ப்பு பிராணிகளையும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பல உயிரினங்கள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் என்பதால், பறவைகளுக்காக ஒரு பாத்திரத்தில் நீர் பிடித்து வைக்க வேண்டும் என்றும்,
அதே போல் பொதுவான இடங்களில் மாடு, நாய் போன்ற உயிரினங்கள் நீர் அருந்துவதற்காகத் தொட்டிகளை வைக்க வேண்டும் என்றும் பல தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications