விநாயகர் சதுர்த்திக்கு நோ வாழ்த்து.. பெரியாருக்கு மாலை.. விஜய் கொள்கை இதுதான்.. 7 முக்கியமான விஷயம்!
சென்னை: தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரின் இந்த செயல் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறுமென கூறப்பட்ட நிலையில், அதை தள்ளி வைக்க முடிவெடுத்திருக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது. த.வெ.க. மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விக்கிரவாண்டியில் வரும் 23ஆம் தேதி தவெக முதல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு நடிகர் விஜய் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கிறார். முக்கியமாக சில பழைய கைகளை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான பணிகளை நடிகர் விஜய் முடுக்கி விட்டு உள்ளாராம்.

ஆனால் சொன்ன தேதியில் மாநாடு நடக்குமா என்று சந்தேகிப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில்தான் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலே, கீழ் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறத்தில் கொடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டு உள்ளது. இவை போர் யானைகள் ஆகும். நடுவில் வாகைப்பூ வைக்கப்பட்டு உள்ளது.
பெரியார் மரியாதை: இப்படிப்பட்ட நிலையில்தான் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரின் இந்த செயல் 7 முக்கியமான கேள்விகளை.. விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
1. விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. பெரியாருக்கு மாலை அணிவித்து உள்ளார். பெரும்பாலும் அவரின் கொள்கை மதசார்பற்ற கட்சி கொள்கையாகவே இருக்கும்.
2. விஜய் தொடக்கத்திலேயே கட்சி தொடங்கும் அறிக்கையில் பெரியார், அம்பேத்கார் பெயரை பயன்படுத்தினார். அதுவும் கொள்கை மதசார்பற்ற கட்சி கொள்கை என்பதையே காட்டியது.
3. ஓணம் கேரளாவில் இந்து பண்டிகையாக இல்லாமல் சமத்துவ பண்டிகையாக கொண்டாடப்படும் நிலையில் அதற்கு வாழ்த்து சொன்ன விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை.
4. இதன் மூலம் விஜய் தன்னை மதசார்பற்ற கட்சி கொள்கை கொண்டவராக மட்டும் காட்டாமல்.. திமுகவிற்கு எதிர் தரப்பு என்பதையும் காட்டி உள்ளார்.
5. இப்போது கிட்டத்தட்ட திமுக, அதிமுகவின் அதே கொள்கையை விஜய் பேச தொடங்கி உள்ளார். திமுகவிற்கு கண்டிப்பாக விஜய் போட்டிதான்.. அதே சமயம்.. திமுக வலுவான தலைமையுடன் இருக்கும் நிலையில், தோல்வி முகத்தில் இருக்கும் அதிமுகவின் வாக்குகளை குறி வைத்து விஜய் களமிறங்குகிறாரோ என்ற கேள்வி உள்ளது.
6. இன்னொரு பக்கம் விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய கூட்டாளி கிடைக்கும் சூழலை விஜய் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். பாஜகவோடு சேர முடியாத விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக விஜய் உருவெடுத்துள்ளார்.
7. தமிழ்நாட்டில் பெரியாரை தாண்டி ஆன்மீக அரசியல் எல்லாம் செய்ய முடியாது. இதை விஜய் உணர்ந்து கொண்டுள்ளார். இதனால் அவர் பாஜக பக்கம் சாய வாய்ப்பு குறைவு என்பதும் அவரின் செயல்கள் மூலம் தெரிய தொடங்கி உள்ளன.
-
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
இனி யாருக்காக அரசியல் செய்யணும்.. கலக்கத்தில் சீமான்.. லைம்லைட்டை இழந்து நிற்கும் நாம் தமிழர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
மின் வெட்டை தடுக்க களமிறங்கும் 10 சிறப்பு குழுக்கள்.. பறக்கும் 125 மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள்! -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு! -
முடிவை மாற்றிய ராகவா லாரன்ஸ்.. விஜய்யா? அண்ணாமலையா? யாருடன் கைகோர்க்கிறார்? நாளை மறுநாள் அறிவிப்பு -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications