"ஒரு படத்தை எடுத்துட்டா நீ என்ன பெரிய கல்வி அறிஞரா.." லப்பர் பந்து இயக்குநரை தாக்கி பேசிய சீமான்
சென்னை: படிக்காமல் முன்னேற முடியும் எனச் சொல்வோரை நம்ப வேண்டாம், என்பது போல லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இதற்கிடையே நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதற்குப் பதில் கொடுத்துள்ளார். ஒரு சினிமா எடுத்துவிட்டு கல்வி அறிஞர் போல எல்லாம் பேசக்கூடாது என அவர் சாடியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் நேற்றைய தினம் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் மூலம் பலன் பெற்ற மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அரசுத் திட்டங்கள் தங்களுக்கு எந்தளவுக்கு உதவியது என்பது குறித்த தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். புதுமைப் பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன் திட்டங்கள் மூலம் பயனடைந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

லப்பர் பந்து இயக்குநர்
அதேபோல இந்த நிகழ்வில் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். அப்படித் தான் லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "கல்விக்காக நாம் எப்போதும் முன்னால் நிற்க வேண்டும். பொதுவாகச் சிலர் ஒன்று சொல்வார்கள். சச்சின் படித்தாரா.. இளையராஜா படித்தாரா.. ரகுமான் படித்தாரா என கேட்பார்கள்.. அதை நம்பிவிடாதீர்கள். அப்படி ஜெயித்தவர்கள் வெறும் 100 பேர் தான். ஆனால், படித்ததால் ஜெயித்தவர்களே இங்கு அத்தனை பேர் இருக்கிறார்கள். விதி விலக்காக இருப்போர் நிச்சயம் எடுத்துக்காட்டாக ஆக முடியாது" என்று பேசியிருந்தார்.
சீமான் பதிலடி
தமிழரசன் பச்சமுத்து தனது பேச்சில் யாரையும் குறிப்பிடவில்லை. சிலர் இதுபோல சொல்கிறார்கள். அதை நம்பிவிடாதீர்கள் என மட்டும் பொதுவாகப் பேசியிருந்தார். இதற்கிடையே தமிழரசன் பச்சமுத்துவுக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் கொடுத்துள்ளார். ஒரு சினிமா எடுத்துவிட்டு கல்வி அறிஞர் போல எல்லாம் பேசக்கூடாது என அவர் சாடியுள்ளார்.
ஒரு படம் எடுத்துவிட்டால்
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "சச்சின் படித்தாரா.. இளையராஜா படித்தாரா.. ரகுமான் படித்தாரா எனக் கேட்பார்கள் எனச் சொல்கிறாய்.. நான் என்ன சொல்கிறேன் என்பதையே நீ காதில் வாங்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஒரு படம் எடுத்துவிட்டால் நீ பெரிய கல்வி அறிஞர் என நினைத்துக் கொண்டு வந்து கருத்து சொல்லிவிடுகிறார்.. நான் என்ன சொல்கிறேன் என்பதே உணக்கு புரியவில்லை.
சரி, நீ யார் அந்த மேடையில் நின்று பேச.. நீ ஒரு படத்தை இயக்கி இருக்கிறாய்.. ஒரு இயக்குநர் அவ்வளவுதான். நீ இயக்குநராக நீ படித்த கல்வியா காரணம்? அப்படித் தனித்திறன் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றே நான் சொல்கிறேன். நான் என்ன சொல்கிறேன் என்பதை முழுமையாகக் கேட்காமல்.. ஏதோ சொல்லிக் கைதட்டு வாங்க வேண்டும் என்பதற்காகப் பேசக்கூடாது.
முதல்வரின் கல்வித்தகுதி என்ன
முதல்வர், துணை முதல்வரின் கல்வித்தகுதி என்ன? பிரதமர் மோடியின் கல்வித் தகுதி என்ன? உதயநிதியே சொல்கிறார்.. என்னோடு படித்தவர்கள் எல்லாம் வக்கீல் ஆகிவிட்டார்கள் என்கிறார். அதாவது படித்து மற்றவர்கள் வக்கீல் ஆகிவிட்டார்கள்.. படிக்காமல் நான் துணை முதல்வர் ஆகிவிட்டேன் என்கிறார்" என்று தெரிவித்தார்.
-
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை.. அன்பான சர்வாதிகார ஆட்சி டூ திருச்சி தலைநகரம்.. சீமான் அதிரடி -
"தமிழகத்தில் தண்ணீர் விற்க தடை".. நாம் தமிழர் தேர்தல் அறிக்கையில் அதிரடி.. முக்கிய 10 அறிவிப்புகள் -
தமிழகத்துக்கு 5 தலைநகர்.. சென்னை – திருச்சி - கோவை - மதுரை -குமரிக்கு இடம் - நாம் தமிழர் அறிவிப்பு -
நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு! -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
18 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. இடி,மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications