தை பொங்கல் முடிந்த பின்னரும் பரிசு வாங்கலாம்..அமைச்சர் சக்கரபாணி சொன்ன குட்நியூஸ்
சென்னை: ஜனவரி 13ம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற முடியாதவர்கள் பொங்கல் முடிந்த பின்னரும் ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். வெளியூர் சென்றவர்கள் ஜனவரி 15 ஆம் நாள் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் பரிசு தொகுப்பையும் ரொக்கப்பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் முழுக் கரும்பு, பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 ஆயிரம் நியாயவிலைக் கடைகளில் திங்கட்கிழமை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் செய்யப்படுகிறது. ரேசன் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க நாள்தோறும் 200 பேருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 93 சதவீதம் பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து, பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைக்கவுள்ளார்.
இதற்கிடையே ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் ரூ.1000 ரொக்கத்தை எந்த ரேஷன் கடையிலும் பெற முடியுமா என்று பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் தெளிவான விளக்கமளித்துள்ளார். அதாவது பொங்கல் பரிசு தொகுப்பை எந்த ரேஷன் கடையிலும் பெற்று கொள்ள அனுமதி அளித்தால் அதில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அந்தந்த ரேஷன் கார்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பை பெற முடியும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்,தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தொடங்கப்படுகிறது. அதன்படி வரும் 13ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி டோக்கன் பெற்றவர்கள், டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சென்று பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம்.
அதேசமயம் சமயத்தில் பல்வேறு காரணங்களுக்காக டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்கள் வருகிற 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அந்தந்த ரேஷன் கடைகளில் தங்களது ரேஷன் கார்டை கொண்டு வந்து பொங்கல் தொகுப்பினை பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க முடியாதா என்ற கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளார் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.

ஜனவரி 13ம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற முடியாதவர்கள் பொங்கல் முடிந்த பின்னரும் ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ.1,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க ரூ.2,357 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இந்த குறிப்பிட்ட தேதிகளில் பொங்கல் பரிசு பெற முடியாதவர்கள், வெளியூர் சென்றவர்கள் ஜனவரி 15 ஆம் நாள் பொங்கல் பண்டிகை முடிந்ததை அடுத்து ஜனவரி 16 ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
முன்னதாக பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கனை பெற்று கொண்ட அதற்கான நாளில் வந்து பெற்று கொள்ளலாம். இதில் ஏதும் முறைகேடுகள் நடந்தால் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய எண்களிலும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
-
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications