நிறைவேறும் பல வருட கோரிக்கை.. தமிழ்நாடு போக்குவரத்து துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி செம ஈஸி!
சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பாக இன்று முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வியாபாரிகள், விவசாயிகள், பொது மக்கள் பார்சல் அனுப்ப வேண்டும் என்றால் பொதுவாக அவர்கள் நம்பி இருப்பது தனியார் பேருந்துகளைத்தான். ரயிலிலும் கூட பார்சல் அனுப்பப்படும்.
ஆனாலும் உடனே இரவு அனுப்பி காலையில் எளிதாக சேர வேண்டும் என்றால் தனியார் பேருந்துகளில் அனுப்புவதே சரியாக இருக்கும்.
அதோடு கோயம்பேடு போன்ற மார்க்கெட்டில் இருந்து கூட தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு இப்படி பார்சல் அனுப்பப்படுவது வழக்கம்.

அரசு
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் இதேபோல் பார்சல் வசதி கொண்டு வர வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்றில் இருந்து அரசு பேருந்துகளில் பார்சல் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசு விரைவுப் பேருந்துகளில் மட்டும் இனி பார்சல்களை அனுப்ப முடியும். இதற்காக கட்டணம் வசூலிக்கப்படும்.

பல நாள் கோரிக்கை
வியாபாரிகள், விவசாயிகள் பல நாட்களாக கோரிக்கை வைத்த நிலையில், தமிழ்நாடு அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றி உள்ளது. முதல் கட்டமாக 7 நகரங்களில் மட்டும் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, மதுரை, ஓசூர், கோவை, செங்கோட்டை ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு பார்சல் அனுப்ப முடியும். இந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் விரைவு பேருந்துகளின் மேல் பார்சல்களை அனுப்ப முடியும்.

போக்குவரத்து
இந்த 7 நகரங்களில் பேருந்து நிலைய அதிகாரிகளை அணுகி, அங்கு உள்ள முன் பதிவு மையத்தில் பார்சல் பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளில் பார்சல் வசதி செயல்படுவது போலவே இதிலும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் பேருந்துகளை விட கட்டணம் 30 சதவிகிதம் இதில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து கழகத்திற்கும் இதனால் வருமானம் அதிகரிக்கும்.

எவ்வளவு
ஆனால் அதிகபட்சம் 80 கிலோ வரை மட்டுமே பார்சல் அனுப்ப முடியும். 80 கிலோ வரையிலான பார்சல் அனைத்திற்கும் ஒரே விலை ஆகும். திருச்சியில் இருந்து சென்னைக்கு பார்சல் அனுப்ப 210 ரூபாய் ஆகும். இதேபோல் மற்ற நகரங்களுக்கு 230, 300 என்ற அளவில் பல்வேறு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக மாத கட்டணமும் செலுத்தி தினமும் கூட பார்சல் அனுப்ப முடியும். வாராந்திர கட்டண முறையும் உள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications