"கள்ளச்சாராய மரணத்தை மறைக்க தமிழைத் தேடி ஓடுவீர்கள்" முதல்வர் குறித்து அண்ணாமலை விமர்சனம்
சென்னை: கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை மறைக்கவே இந்த ஒற்றைத் தந்திரம் என ரூ 2000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அதாவது அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. மக்கள் தங்கள் கைவசம் இருக்கும் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும் கூறப்பட்டது.

இதனால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். அதேபோல், புதிய ரூ 500, ரூ 2000, ரூ 200 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. அப்போது முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. 2018-2019 ஆம் ஆண்டு முதல் ரூ 2000 நோட்டுகள் அச்சடிப்பதையும் ஆர்பிஐ நிறுத்திவிட்டது.
இந்த நிலையில், ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது.
பணமதிப்பிழப்பு பிரச்சினைகள் குறைந்ததாலும் இதர ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் புழக்கத்தில் இருப்பதாலும் ரூ 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
வரும் 23ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவருக்குரிய வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துளளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், கர்நாடக தேர்தல் தோல்வியை மறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விமர்சித்து இருந்தார். முதல்வர் மு.க ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் ட்விட் போட்டுள்ளார். அதில் அண்ணாமலை கூறியிருப்பதவது:-
கள்ளச்சாராயத்தால் 22 மரணங்கள், உயிர் இழப்பிற்கு காரணமானவருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு, திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள், டாஸ்மாக் வருமானம் 50,000 கோடி, இவை எல்லாம் மறைக்க நீங்கள் ஓடுவீர்கள் தமிழைத் தேடி. பாசமா? எல்லாம் வேஷம்!" என்று பதிவிட்டுள்ளர்.
-
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம்












Click it and Unblock the Notifications