நோட் பண்ணுங்க.. இனிமே இதுக்கும் வரி செலுத்தணும்.. வருமான வரி சட்டத்தில்.. வந்தது புதிய விதி!
சென்னை: க்ரிப்டோகரன்சி உள்ளிட்ட டிஜிட்டல் பணத்திற்கு வரி விதிக்கும் பிரிவு புதிய வருமான வரி சட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. டிஜிட்டல் பணம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதன் மூலம் வரும் வருவாயை virtual digital assets என்ற பிரிவில் சேர்க்க புதிய சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்தியாவில் இன்னும் முறையாக க்ரிப்டோகரன்சி சட்டபூர்வமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் நாம் பயன்படுத்தும் பணம் போலவே இணையத்திலும் நிறைய பணம் இருக்கிறது.

இந்த பணத்தை நாம் நேரடியாக பயன்படுத்தாமல் இணையத்தில் மட்டுமே பயன்படுத்துவோம். 1500க்கும் அதிகமான இதுபோன்ற பணங்கள் உலகில் பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கு 'கிரிப்டோ கரன்சி' என்று பெயர். அவற்றில் ஒன்றுதான் இந்த பிட்காயின்.
இந்த பிட்காயினை நாம் பணம் கொடுத்தோ, பங்குகள் கொடுத்தோ வாங்கி கொள்ள முடியும். மேலும் தங்கத்திற்கு பதிலாகவும் இதை மாற்ற முடியும். இதற்கு வடிவம் இல்லை என்பதால் இதை வைத்து இணையத்தில் எளிதாக பொருட்கள் வாங்கலாம். மேலும் இதற்கு சரியான வரி விதிப்பு முறையோ, வங்கி கட்டுப்பாடோ இல்லை என்பதால் இதில் அதீத சுதந்திரம் இருக்கிறது.
பிளாக் செயின்: பிளாக் செயின் தொழில்நுட்பத்தில்தான் கிரிப்டோகரன்சி செயல்படுகிறது . உலகிலேயே மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பம் ஆகும் இது. இணையத்தில் க்ரிப்டோகரன்சிகளுக்காக இருக்கும் லெட்ஜர் என்று இதை கூறலாம். எந்த வங்கியின் கட்டுப்பாட்டிலும் இல்லாத தனி தனி கரன்சிகள் ஆகும் இது. உலகம் முழுக்க கிரிப்டோ கரன்சி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பிட்காயின் வரி விதிப்பு
இப்படிப்பட்ட பிட்காயின் போன்ற க்ரிப்டோகரன்சி உள்ளிட்ட டிஜிட்டல் பணத்திற்கு வரி விதிக்கும் பிரிவு புதிய வருமான வரி சட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. டிஜிட்டல் பணம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதன் மூலம் வரும் வருவாயை virtual digital assets என்ற பிரிவில் சேர்க்க புதிய சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
புதிய வருமான வரி சட்டம்
புதிய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 கீழ் யாருக்கெல்லாம் வருமான வரி கிடையாது, எந்தெந்த வருமானங்களுக்கு வரி கிடையாது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. 'வருமான வரி மசோதா 2025' என அழைக்கப்படும் புதிய வருமான வரி மசோதா, ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. நேற்று இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961, மொத்தம் 298 பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த புதிய I-T மசோதாவில் இது 536 உட்பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது, தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961க்குப் பதிலாக கொண்டுவரப்படும். மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, இது 'வருமான வரிச் சட்டம், 2025' என்று அழைக்கப்படும்.
'மதிப்பீட்டு ஆண்டு', 'நிதி ஆண்டு' மற்றும் 'முந்தைய ஆண்டு' ஆகிய வார்த்தைகளை 'வரி ஆண்டு' என்ற ஒரு என்று மாற்றும். வரி ஆண்டு என்று ஏப்ரல் 1, 2026 முதல் 12 மாத நிதிக் காலத்தை கொண்டது ஆகும். இதன் வரைவு மசோதா தற்போது வெளியாகி உள்ளது. இந்த மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகள் (மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு பிரிவுகளாக மாறும்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 கீழ் பின்வரும் முறையில் வருமானங்கள் வந்தால் வரி கிடையாது
விவசாய வருமானத்திற்கு வரி கிடையாது.
கூட்டு நிறுவன லாபங்கள் மூலம் வருமானத்திற்கு வரி கிடையாது.
குடும்ப ஓய்வூதியங்கள் மூலம் வருமானத்திற்கு வரி கிடையாது.
உதவித்தொகை மூலம் வருமானத்திற்கு வரி கிடையாது.
NRE / FCNR டெபாசிட்டுகளுக்கான வட்டி மற்றும் குறுகிய கால விலக்குகள் மூலம் வருமானத்திற்கு வரி கிடையாது.
அரசின் நிதி உதவிகள் மூலம் வரும் வருமானங்களுக்கு வரி கிடையாது, பல்வேறு வகையான வருமானங்களுக்கான விலக்குகளை இந்த சட்டம் லிஸ்ட் போட்டு உள்ளது. .
வருமான வரி மசோதாவில் உள்ள இந்தப் புதிய வடிவம் தனிநபர்கள் தங்களின் குறிப்பிட்ட வருமானத்திற்கு விலக்கு அளிக்கப்படுகிறதா இல்லையா என்பதைத் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். புதிய சட்டம் இந்த செயல்முறையை எளிதாக்குகிறது.












Click it and Unblock the Notifications