மன்னிப்பு கேட்டும் விடாத நிருபர்.. திடீரென சொடக்குப்போட்டு யோகி பாபு சொன்ன வார்த்தை.. பரபரப்பு
சென்னை: இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடித்துள்ள படம் போட். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு தாமதமாக வந்த நடிகர் யோகி பாபு மன்னிப்பு கோரினார். அவர் மேடையில் இருந்து இறங்கி சென்றபோது விடாமல் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு சொடக்குப்போட்டு யோகி பாபு கூறிய வார்த்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் யோகி பாபு. அதன்பிறகு அவர் காமெடி நடிகராக வலம் வந்தார். தற்போது காமெடி நடிகராவும், ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தற்போது தமிழ் திரையுலகில் மிகவும் பிஸியாக வலம் வரும் நடிகராக யோகி பாபு மாறி உள்ளது.

தற்போது நடிகர் யோகி பாபுவின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே நடந்து வருகிறது. தமிழ்நாடு கேரளா எல்லையில் கேரளாவுக்கு சொந்தமான கும்பாவுருட்டி அருவி மற்றும் அதனை சுற்றிய வனப்பகுதியில் சூட்டிங் நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு, 96 திரைப்பட புகழ் கவுரி கிஷன் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ள ‛போட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகை கவுரி கிஷன், இயக்குநர் சிம்புதேவன், நடிகர் எம்எஸ் பாஸ்கர், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இதில் தாமதமாக யோகி பாபு வந்தார்.
மாலை 6 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கும் என கூறப்பட்ட நிலையில் யோகி பாபு மிகவும் தாமதமாக வந்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு இரவு 9 மணிக்கு யோகி பாபு வந்தார். மேடை ஏறிய யோகி பாபுவிடம் தாமதமாக வந்தது பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு யோகி பாபு, "நேற்று முன்தினம் குற்றாலத்தில் சூட்டிங் இருந்தது. பத்து மணி நேரம் காரில் பயணம் செய்து தான் புரொமோஷனில் பங்கேற்றேன். எல்லா கம்பெனியும் எல்லா நேரமும் அட்ஜெஸ்ட் பண்ணமாட்டார்கள். எனது சூழ்நிலை அப்படி மாட்டிக் கொண்டேன். அந்த ஹீரோவுக்கு வேற இன்னும் 2, 3 நாளில் கல்யாணம் ஆகப்போகிறது. இதனால் முடித்து கொடுத்துவிட்டு செல்லுங்கள் என சொல்லிவிட்டனர்.
யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம்.எப்போதும் உங்கள் சப்போர்ட் எனக்கு வேண்டும். ரொம்ப ரொம்ப நன்றி. ரொம்ப கடின உழைப்புடன் உருவான படம் இது. இதனை நீங்கள் தான் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும். ரொம்ப ரொம்ப நன்றி. தாமதமாக வந்ததற்கு மன்னித்து விடுங்கள். ரொம்ப ஸாரிங்க'' என்றார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛நீங்கள் 6 மணி என்று சொன்னீர்கள். ஆனால் 3 மணிநேரம் தாமதித்து 9 மணிக்கு வந்துள்ளீர்கள். உங்களுக்கு வேலை இருப்பது போல் எங்களுக்கும் வேலை இருக்காதா?'' என்று கேள்வி கேட்டார். அதற்கு யோகி பாபு, ‛‛எனக்கு நேரம் எதுவும் சொல்லவில்லை. அதேவேளையில் என்னுடைய சூழ்நிலையை நான் கூறிவிட்டேன். அதற்கு நீங்கள் வாருங்கள்.. பார்த்து கொள்ளலாம் என கூறினார்கள். எல்லா சிக்னலுக்கும் சென்று நான் கேட்க முடியாது இல்லையா?. நான் காரில் தானே வருகிறேன்.
நீங்கள் சொல்வது எல்லாம் புரிகிறது. கொஞ்சம் நிதானமாக கேளுங்கள். உங்களின் கோபம் புரிகிறது. அதற்கு தான் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன்'' என்றார். அதன்பிறகு யோகி பாபு தனது பேச்சை முடித்துவிட்டு நன்றி கூறிவிட்டு மேடையில் இருந்து இறங்கினார். இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛நடிகர் சங்க தலைவராக போவதாக ஒரு தகவல் இருக்கிறது'' என்று கேள்வி எழுப்பினார். அதனை கேட்டதும் சிரித்த யோகி பாபு, பத்திரிகையாளர் இருக்கும் இடத்தை நோக்கி சொடக்குப்போட்டு, ‛‛மைக்கை ஆஃப் பண்ணிட்டு வெளியே வா.. நான் பேசுறேன்'' எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications